தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஆவலூட்டும் அவல் பிரியாணி

ஆவலூட்டும் அவல் பிரியாணி

ஆவலூட்டும் அவல் பிரியாணி


PUBLISHED ON : ஏப் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடுப்பைப் பற்றவைக்க வேண்டியதில்லை. சரியாக வெந்ததா, கிளறி விட்டோமா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. எளிமையாகச் செய்யக்கூடிய, சத்து அதிகம் நிறைந்த, பிரியாணி போன்ற உணவை நாமே செய்யலாம். ஆவலை அதிகம் தூண்டுகிறதா? அதுதான் அவல் பிரியாணி. எப்படிச் செய்வது என்று பார்ப்போமா?

அவல் பிரியாணி தேவையான பொருட்கள்

* அவல்

* தேங்காய்ப் பால்

* பட்டை

* கிராம்பு

* சோம்பு

* இஞ்சி

* பூண்டு

* புதினா

* கறிவேப்பிலை

* கொத்தமல்லி

* உப்பு

செய்முறை: அவலை சுத்தப்படுத்தி, தேங்காய்ப் பாலில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் பட்டை, கிராம்பு, சோம்பு பொடித்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை கழுவி பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டிக் கிளறினால் அவல் பிரியாணி தயார். இதற்குத் தொட்டுக்கொள்ள, தேங்காய்ப் பால் பச்சடி செய்துகொள்ளலாம்.

தேங்காய்ப் பால் பச்சடி

தேவையான பொருட்கள்

* தேங்காய்ப் பால்

* எலுமிச்சம் பழம்

* வெங்காயம்

* கேரட்

* வெள்ளரிக்காய்

செய்முறை: தேங்காய்ப் பாலில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட வேண்டும். அரை மணிநேரம் கழித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், வெள்ளரிக்காய் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இப்போது சுவையான தேங்காய்ப் பால் பச்சடி தயார்!

எளிமையான முறையில் தயாரிக்கக்கூடிய இந்த அவல் பிரியாணியும், தேங்காய்ப் பால் பச்சடியும் மிகுந்த சத்து நிறைந்தவை. சாப்பிட ருசியாகவும் இருக்கும். செய்து, உண்டு மகிழுங்கள்.

- கி.சாந்தா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us