தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நேர்மையான மனிதர்!

நேர்மையான மனிதர்!

நேர்மையான மனிதர்!


PUBLISHED ON : டிச 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தனக்குக் கிடைத்த பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தன் நேர்மையான கொள்கைகளை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. தான் இருந்த கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முரண்பட்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் 1997இல் நாட்டின் 12வது பிரதமர் ஆனபோது, கட்சியின் தலைமை அவரை ஆட்டுவிக்க முயற்சி செய்ததால், 11 மாதங்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் இந்தர் குமார் குஜ்ரால்.

விடுதலைப் போராட்ட தியாகிகள் குடும்பத்தில் பிறந்ததால், இளம் வயதிலேயே இவருக்கும் சுதந்திர உணர்வு அதிகம். சிறுவர்கள் அமைப்பை வழிநடத்திச் சென்றதற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டதோடு, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்திலும் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். இந்திரா காந்தியின் அமைச்சரவையில் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர். பின்னர், சில காரணங்களுக்காக அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டார்.

1980இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, இணைந்தார் ஜனதா தளத்தில். 1989இல் ஜலந்தர் நாடாளுமன்ற உறுப்பினராகி, வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சரானார். இந்தியாவின் மிகச்சிறந்த வெளியுறவு அமைச்சர் என்பது இவரது உழைப்புக்குக் கிடைத்த மணிமகுடம். இரண்டு முறை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர். அந்தச் சமயத்தில், உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க, அண்டை நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்தினார்.

குவைத் மீது ஈராக் படையெடுத்து ஆக்கிரமித்ததும், அதன் விளைவாக 1991இல் ஏற்பட்ட முதலாம் வளைகுடா போரும் இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது கையாண்ட பெரிய சவால். அதற்காக, ஈராக் அதிபர் சதாம் உசேனை சந்தித்துப் பேசினார்.

பிரதமர் பதவிக்கு முன்பாக வெளியுறவுத் துறை, நீர்வளத் துறை அமைச்சகப் பொறுப்புகளை கவனித்து வந்தார். 1976 - 1980இல்

ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர். இதுதவிர, நாடாளுமன்ற விவகாரத்துறை, தகவல்- ஒலிபரப்பு, கட்டுமானம்- வீட்டு வசதித்துறை, திட்டமிடல் துறைகளிலும் மனசாட்சிக்கு நேர்மையாக ஆட்சி செய்திருக்கிறார் இந்த மனிதர்!

ஐ.கே. குஜ்ரால்: 4.12.1919 - 30.11.2012

ஜீலம், மேற்கு பஞ்சாப் (இன்றைய பாகிஸ்தான்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us