தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : டிச 04, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிசம்பர் 4, 1910: ஆர். வெங்கட்ராமன் பிறந்த நாள்

8வது (1987-1992) குடியரசுத் தலைவர். அப்போது 4 பிரதமர்கள் மாறினார்கள். அதில் மூன்று பேருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தமிழ்நாட்டில் காமராஜர் அமைச்சரவையில் தொழிலாளர் நலம், மின் துறைகளை நிர்வகித்தார். கிண்டி, அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டைகள் இவர் உருவாக்கியவையே!

டிசம்பர் 5, 2012: உலக மண் நாள்

மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் மண்ணை நம்பியிருக்கின்றன. அந்த மண் வளத்தைப் பாதுகாக்கவும், சீரழிக்காமல் வருங்கால சந்ததியிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தவும் ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் இந்த நாளைக் கடைப்பிடித்து வருகிறது.

டிசம்பர் 5, 1901: வால்ட் டிஸ்னி பிறந்த நாள்

கேளிக்கை உலகில் ஒரு புரட்சியை 20ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தினார். மிக்கி மெளஸ், டொனால்ட் டக் போன்ற புகழ்பெற்ற கேளிக்கைக் கதாபாத்திரங்கள் இவரால் உயிர் பெற்றன. திரையில் பார்த்த டிஸ்னி உலகை, பொழுதுபோக்குப் பூங்காவாக உருவாக்கினார். இவரது 26 படங்கள் ஆஸ்கர் விருது வென்றிருக்கின்றன.

டிசம்பர் 7, 1949: கொடி நாள்

கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி, படைவீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்திய முப்படை வீரர்களின் பணிகளையும், தியாகங்களையும் போற்ற இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

டிசம்பர் 10, 1878: ராஜாஜி பிறந்த நாள்

சி.ராஜகோபாலாச்சாரி ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர். விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார். 1954இல் இவருக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

டிசம்பர் 10, 1948: சர்வதேச மனித உரிமைகள் நாள்

மனித உரிமை என்பது தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தலைநிமிர்ந்து வாழ வழிசெய்ய வேண்டும். சாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடு காட்டி, மனிதனை வேறுபடுத்தக் கூடாது என்பதற்காக, ஐ.நா. சபை இந்த நாளை அறிவித்துக் கொண்டாடி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us