PUBLISHED ON : செப் 24, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருவி என்றால் நமக்கெல்லாம் மேல் இருந்து கீழ்நோக்கி பேரிரைச்சலுடன் கொட்டும் அருவிதானே நினைவுக்கு வரும். அதுவே, கீழிருந்து மேல்நோக்கி எழுந்தால்?! அப்படி ஒரு சம்பவம் வட இங்கிலாந்தில் உள்ள மாலர்ஸ்டேங் முனையில் கம்ப்ரியா (Cumbria) என்ற அருவியில் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில், வட இங்கிலாந்தை ஹெலன் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 130 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால், கீழே விழவேண்டிய அருவி நீர், புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கிச் சீறிப் பாய்ந்தது. அருவியை வேடிக்கை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இதைக்கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தனர். சில நொடிகள் நீடித்த இக்காட்சியைப் படம் பிடித்த சுற்றுலா பயணி ஒருவர், அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

