உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 24, 2019

அ நிறம் | அளவு
இரவில் மக்கள் நடமாட்டம் குறைவான இடங்களில் இரு சக்கர வாகனங்கள் பழுதானாலும் பயப்படாதீர்கள். டில்லி ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த மாணவர்கள் ஐசேஃப் அசிஸ்ட் ('iSAFE Assist) எனும் ஆபத்து உதவிக்கான கைபேசி செயலியைத் தயாரித்துள்ளனர். இதில் 6 ஆயிரத்து 200 நம்பகமான சேவை அமைப்புகள் இணைந்துள்ளன. உதவி தேவைப்படும்போது, இச்செயலியின் மூலம் தொடர்பு கொண்டு உடனே உதவி பெறலாம். இதில் அவசர மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன.
