தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நவீன கல்வியின் சிற்பி!

நவீன கல்வியின் சிற்பி!

நவீன கல்வியின் சிற்பி!


PUBLISHED ON : நவ 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

* 14 வயது வரை இலவச கல்வி கொடுக்க வேண்டும்.

* எல்லா மாணவர்களுக்கும், சாதி, மத, இன பாகுபாடின்றி, தரமான கல்வி வழங்க வேண்டும்.

* அனைத்து கல்வித் திட்டங்களும், மதச் சார்பற்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

* தொழிற்கல்வி, வேளாண் கல்வி, உயர் கல்வி கூடங்கள் நிறுவ வேண்டும்.

இவை அவரின் கொள்கைகள்.

இவற்றை எல்லாம் சொன்னதோடு மட்டும் நின்று விடவில்லை அபுல் கலாம் ஆசாத்!

11 ஆண்டுகள் கல்வி அமைச்சராகப் பணியாற்றி, வருங்கால மாணவர்களுக்காக அன்றே தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டார். இவரது தலைமையின் கீழ், 1951ல் முதலாவது ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் (காரக்பூர்), 1953ல் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission -- யு.ஜி.சி.) ஆகியவை தொடங்கப்பட்டன.

தன்னுடைய ஆரம்பக் கல்வியை தந்தையிடம் கற்று, வீட்டிலேயே ஆசிரியர்கள் மூலம், கணிதம், தத்துவம், உலக வரலாறு, அறிவியல் கற்றார். 12 வயதில் இலக்கியப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி, தன் 16 வயதில், மாத இதழ் தொடங்கி நடத்த ஆரம்பித்துவிட்டார்.

வங்கப் பிரிவினையின்போது, அரசியலில் நுழைந்து, நாடு முழுவதும் இளைஞர்களிடம் உரையாற்றி, தேசபக்தியை உண்டாக்கினார். ஆங்கில அரசை எதிர்த்துப் போராடிய அரவிந்தருக்கு உறுதுணையாக இருந்தார். திலகர், காந்தியடிகளை 1920ல் சந்தித்தார். 'பிளேட்டோ, அரிஸ்டாட்டில், பிதாகரஸ் ஆகிய மூவரும் சேர்ந்த ஆளுமை இவர்' என்று காந்தியடிகள் இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவராக இருந்த ஆசாத் மறைந்த பிறகு, 1992ல், 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

இந்தியாவில், நவீன கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட அபுல் கலாம் ஆசாத்தை நினைவுகூரும் வகையில், அவரது பிறந்த நாள், 'தேசிய கல்வி நாள்' ஆகக் கொண்டாடப்படுகிறது.

மௌலானா அபுல் கலாம் ஆசாத்

வாழ்ந்த காலம் 11.11.1888 - 22.02.1958

பிறந்த ஊர்: மெக்கா, சவுதி அரேபியா

வாழ்ந்த ஊர்: ல்கட்டா

கௌரவம்: சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us