நாங்க ரெடி நீங்கள் ரெடியா? 10ம் வகுப்பு சென்டம் டிப்ஸ்..
நாங்க ரெடி நீங்கள் ரெடியா? 10ம் வகுப்பு சென்டம் டிப்ஸ்..
PUBLISHED ON : மார் 14, 2016
கணிதம்
ஒரு மதிப்பெண் வினாக்கள்: மொத்தம் 15 ஒரு மதிப்பெண் வினாக்கள் வரும். பாடத்தின் பின்பகுதியில் இருக்கும் கேள்விகளை நன்கு தயார் செய்து கொள்ளவும். புத்தகத்தில் மொத்தம் 206 ஒரு மதிப்பெண் வினாக்கள் இருக்கின்றன. அலகு எண் 2, 3, 5, 6, 7 ஆகிய 5 பாடங்களைப் படித்தாலே 10 வினாக்கள் உறுதி.
இரண்டு மதிப்பெண் வினாக்கள்: வினா எண் 16 முதல் 30 முடிய. 30 ஆவது வினா கட்டாயம் எழுத வேண்டியது. இது எந்த பாடத்தில் இருந்தும் கேட்கப்படலாம். மீதம் இருக்கும் 14 கேள்விகளில் 9 கேள்விகள் தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றில் 2 கேள்விகள் நன்கு சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் இருக்கும். கவனம் தேவை. அந்தக் கேள்விகளைத் தவிர்த்தாலும், 12 கேள்விகளில் 9 கேள்விகளைத் தேர்ந்தெடுத்து முழு மதிப்பெண் பெறலாம். பாடங்களின் பின்பகுதி வினாக்கள் முக்கியம்.
ஐந்து மதிப்பெண் வினாக்கள்: வினா எண் 31 முதல் 45 முடிய. 45ஆவது வினா கட்டாயம் எழுத வேண்டியது. பாடங்களின் பின்பகுதி வினாக்களைப் பயிற்சி செய்வது அவசியம். இது எந்தப் பாடத்தில் இருந்தும் கேட்கப்படலாம். மீதம் இருக்கும் 14 கேள்விகளில் 8 கேள்விகள் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கேயும் 2 கேள்விகள் நன்கு சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் இருக்கும். அவற்றைத் தவிர்த்து, மீதி இருக்கும் 12 கேள்விகளில் 8 கேள்விகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
46 ஆவது கேள்வி கிராபில் இருந்து வரும். இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
47 ஆவது கேள்வி ஜியாமெட்ரி கேள்வி. இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
1, 2, 3, 4, 5, 7, 8 ஆகிய பாடங்களில் உள்ள எடுத்துக்காட்டு, பயிற்சி வினாக்கள் உட்பட அனைத்து வினாக்களையும் பயிற்சி செய்வது அவசியம். பாடம் 6ல் உள்ள தேற்றம் சார்ந்த 2 மதிப்பெண் வினாக்கள், பாடம் 11, 12 இவைகளில் உள்ள எளிய வினாக்களைக் கூடுதலாகப் பயிற்சி செய்ய வேண்டும். செய்முறை வடிவியலில் உள்ள தொடுகோடு, வட்ட நாற்கரம், வரைதலில் கூடுதல் பயிற்சி முக்கியம்
வரைபடத்தில் உள்ள சிறப்பு வரைபட வினாக்களில் கூடுதல் பயிற்சி எடுப்பது அவசியம்.
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்: அனைத்தையும் பயிற்சி எடுத்தால் முழு மதிப்பெண்கள் உறுதி.
பா. சுரேஷ்
பட்டதாரி ஆசிரியர் - கணிதம்,
பி. ஏ. கே. பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி,
பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.
அறிவியல்
ஒரு மதிப்பெண் வினாக்கள்: ஒரு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 15. அலகு எண் 10, 14 தவிர ஏனைய 15 பாடங்களில் இருந்து தலா ஒரு வினா வரும். பாடத்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளை நன்கு தயார் செய்து கொள்ளவும்.
இரண்டு மதிப்பெண் வினாக்கள்: இரண்டு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 32. அலகு 1, 5, 6, 8, 16, 17 ஆகியவற்றில் இருந்து 3 வினாக்கள் வீதம் மொத்தம் 18 வினாக்கள் கேட்கப்படும். அலகு 9, 11, 12, 15 ஒவ்வொன்றிலும் தலா 2 வினாக்கள் வீதம் 8 வினாக்கள் கேட்கப்படும். அலகு 2, 3, 4, 7, 10, 13 ஒவ்வொன்றிலும் தலா ஒரு வினா மட்டுமே இடம்பெறும். 14 ஆம் அலகில் வினாக்கள் எழுத்துத் தேர்வில் இடம் பெறாது. பாடங்களின் பின்பகுதி வினாக்கள் முக்கியம்.
ஐந்து மதிப்பெண் வினாக்கள்: தொகுதி A - அலகு 2 அல்லது 3, தொகுதி B - அலகு 4 அல்லது 7, தொகுதி C - அலகு 10 அல்லது 13, தொகுதி D - அலகு 15 அல்லது 17, ஒவ்வொரு தொகுதிக்கும் மேலே குறிப்பிட்ட அலகுகளில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து, அவற்றில் உள்ள பெரு வினாக்களைத் தயாரித்தல் அவசியம். முழு மதிப்பெண் உறுதி.
B. ஆனந்தன்
உதவி தலைமையாசிரியர்,
இந்து மேல்நிலைப்பள்ளி,
திருவல்லிக்கேணி, சென்னை.
சமூக அறிவியல்
ஒரு மதிப்பெண் வினாக்கள்: பாடங்களின் பின் பகுதியில் இருக்கும் வினாக்கள், முந்தைய வருட வினாத்தாள்கள், பாடங்களின் உட்பகுதியைப் படிப்பது முக்கியம்.
வரலாறு: இரண்டு மதிப்பெண் வினாக்கள் (4/8) பாடம் 1-5ல் 2 கேள்விகள், பாடம் 6-10ல் 2, பாடம் 11 - 14ல் 2 வினாக்கள் வரும். 2 குறிப்புகளுக்கு மேல் எழுத வேண்டும். தலைப்பு வினாக்கள் (2/4) பாடம் 1-8ல் அனைத்து தலைப்பு வினாக்களையும் படிக்கவும்.
ஐந்து மதிப்பெண் வினாக்கள் (1/3) பாடம் 1-8ல் 1 வினா, பாடம் 9-10ல் 1 வினா, பாடம் 11-14ல் 1 வினா வரும். தேவையான இடங்களில் தலைப்பு, உட்தலைப்புகள் இட வேண்டும்.
காலக்கோடு: கி.பி.1885 - 1950 ஆண்டு வரை அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் படிக்க வேண்டும்.
குடிமையியல்: இரண்டு மதிப்பெண் வினாக்கள் (1/2) பாடம் 1 ல் ஒரு வினா, பாடம் 2, 3, 4 லிருந்து ஒரு வினா வரும்.
ஐந்து மதிப்பெண் வினாக்கள் (1/3) பாடம் 1, 4 மட்டும் படித்தால் போதும். பஞ்ச சீலம், சார்க், நுகர்வோரின் உரிமைகள், நுகர்வோரைப் பாதுகாக்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முதலிய வினாக்கள் முக்கியம்.
பொருளியல்: இரண்டு மதிப்பெண் வினாக்கள் (1/2) பாடம் 1, 2 ல் தலா 1 வினா வரும். ஐந்து மதிப்பெண் வினாக்கள் (1/3)
பாடம் 1ல் 1 வினா, பாடம் 2ல் 2 வினாக்கள் வரும். பாடம் 2ல் இருக்கும் 4 கேள்விகளைப் படித்தால், ஒரு கேள்வி உறுதி.
புவிவியல்: இரண்டு மதிப்பெண் வினாக்கள் (4/8) 1, 2, 3, 4, 5, 6 பாடங்களில் அனைத்து வினாக்களும் படித்தால் 4 எழுதிவிடலாம்.
வேறுபடுத்துக வினாக்கள் (4/8) பாடம் 1, 2ல் 2 வினாக்கள், பாடம் 3ல் 1, பாடம் 4, 5, 6ல் 1, பாடம் 7ல் 2 வினாக்கள் வரும். பாடம் 1, 2, 7 க்கு முக்கியத்துவம் தரவும். 4 வினாக்கள் உறுதி. ஐந்து மதிப்பெண் வினாக்கள் (1/3) பாடம் 1-3ல் 1 வினா, 4-7ல் 1, பாடம் 8,9ல் 1 வினா வரும். பாடம் 1, 2, 3, 8 க்கு முக்கியத்துவம் தரவும். காடுகள், மழை நீர், இமயமலையின் முக்கியத்துவங்களில் கவனம் வேண்டும். 5 குறிப்புகளுக்கு மேல் இருக்க வேண்டும்.
வரைபடம்: வரலாறு - ஆசியா, இந்தியா வரைபடங்கள் முக்கியம். புவியியல் - பாடம் 1-7ல் உள்ள வரைபடக் கேள்விகளுக்கு வரைந்து பயிற்சி எடுக்கவும்.
வெ. யுவராஜ்
பட்டதாரி ஆசிரியர் -
சமூக அறிவியல்
சென்னை மேல்நிலைப் பள்ளி, சுப்பராயன் தெரு, சென்னை-30.
