தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நீங்கள் ஷெர்லாக் ஹோம்ஸா?

நீங்கள் ஷெர்லாக் ஹோம்ஸா?

நீங்கள் ஷெர்லாக் ஹோம்ஸா?


PUBLISHED ON : ஏப் 01, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ. நொடியில் எப்படி?

துப்பறிவாளன் ஆகும் ஆசையில் நீங்கள் ஒரு சீனியர் டிடெக்டிவைப் பார்க்கப் போகிறீர்கள். அப்போது அவர் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். அதற்கு நீங்கள் சரியான பதில் சொன்னால், உங்களை உதவியாளராகச் சேர்த்துக்கொள்வார். அவர் சொன்ன சம்பவம் இதுதான்:

அவர் ஒரு சாலையில் போகிறார். ஒரு வீட்டைக் கடக்கும்போது, “அபிலாஷ், என்னைச் சுட்டுவிடாதே... நான் சொல்வது உண்மை” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது. உங்கள் பாஸ், குரல் வந்த திசையை அடையாளம் கண்டு, அந்த வீட்டின் வாசலை அடைகிறார். உள்ளே துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்கிறது.

பாதுகாப்பிற்கு பாஸ் தனது, கைத்துப்பாக்கியைப் பிடித்தபடி, கதவை உடைத்து உள்ளே நுழைகிறார். அங்கே ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். சுடப்பட்ட துப்பாக்கியும் கிடக்கிறது. அந்த அறையில் ஒரு டாக்டர், ஒரு சாமியார், ஒரு போலீஸ் அதிகாரி ஆகியோர் உறைந்துபோய் நின்றிருந்தனர்.

இறந்து கிடந்த பெண்ணின் முகத்தைப் பார்க்கிறார். அவர் ஒரு பிரபலமான நடிகை. உடனடியாக உங்கள் பாஸ், தன் கையில் இருக்கும் துப்பாக்கியை சாமியாருக்கு நேராக நீட்டி, சரண் அடைந்துவிடுங்கள் என்று எச்சரிக்கிறார். அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அவருடன் நடக்கிறார். இப்போது கேள்வி, அந்த அறையில் இருந்த மூன்று பேரில் குற்றவாளி சாமியார்தான் என்பதை நொடிப்பொழுதில் டிடெக்டிவ் எப்படிக்

கண்டு பிடித்தார்?

ஆ. குற்றவாளி யார்?

நீங்கள் சரியான விடையைச் சொல்லி விட்டீர்கள். அந்த டிடெக்டிவும் உங்களைப் பணிக்கு அமர்த்திக்கொண்டார். முதல் நாள் அலுவலகம் போனதும் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. நீங்கள் எடுத்துப் பேசுகிறீர்கள். எதிர்முனையில் ஒரு காவல்துறை அதிகாரி பேசுகிறார்.

ஒரு வயதான பணக்காரப் பெண்மணி இறந்து கிடப்பதாகவும். தங்களால் குற்றவாளியை அடையாளம் காண முடியவில்லை என்றும் உங்களிடம் உதவி கேட்கிறார். விஷயத்தை நீங்கள், உங்கள் பாஸுக்குச் சொல்கிறீர்கள். அவரும் உங்களை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

அந்தக் காவல் அதிகாரி சொன்ன முகவரிக்குச் செல்கிறீர்கள். அதுவொரு பங்களா. உங்களை அங்கிருக்கும் இன்ஸ்பெக்டர் எதிர்கொண்டு அழைக்கிறார். வழக்கு விவரங்களைச் சொல்கிறார். இறந்துபோன அந்தப் பணக்காரப் பெண்மணி தனியாகத்தான் அங்கே வசித்துள்ளார். அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னமே இறந்துவிட்டார். அவரது இரு பிள்ளைகளும் வெளிநாட்டில் இருக்கின்றனர். தனியாளாக அந்தப் பங்களாவில் வாழ்ந்து வருகிறார்.

இன்று காலை அந்தப் பங்களாவிற்கு கூரியர் கொண்டுவந்தவர், பெண் இறந்து கிடப்பதைப் பார்த்து போலீசிற்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் வந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் பிரிக்கப்படாத செய்தித்தாளும், இரு பால் பாக்கெட்டுகளையும் தவிர வேறொன்றும் தடயம் இல்லை.

விசாரணையில், பங்களாவில் வேலைக்காரர்கள் யாருமில்லை என்பதும் தெரியவந்தது. குழம்பிப்போன போலீசார், உதவிக்கு உங்களை அழைத்துள்ளனர்.

கொஞ்ச நேரம் சிந்தித்த உங்கள் பாஸ், அந்தப் பங்களாவைச் சுற்றிப் பார்க்கிறார். நீங்களும் உடன் செல்கிறீர்கள். ஆனால், வித்தியாசமாக ஏதும் தென்படவில்லை. திரும்பவும் வீட்டுக்கு வந்த உங்கள் பாஸ், ஒரு குறிப்பிட்ட நபரைப் பிடித்துவரும்படி சொல்கிறார். போலீசாரும் சிறிது நேரத்தில் அவனைப் பிடித்து வருகின்றனர். தான் குற்றவாளி என்பதை அவனும் ஒப்புக்கொள்கிறான்.

யார் அவன்? உங்கள் பாஸ், குற்றவாளியை எப்படிக் கண்டுபிடித்தார்?

இ. பொய் சொன்ன டீச்சர்!

ஜூன் மாதம். பள்ளிகள் திறந்த மூன்றாம் நாள். ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவரின் கைப்பையில், மகள் திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த 25 சவரன் நகை களவுபோய்விட்டது. பள்ளிக்கு வந்த காவல் துறையினர், பள்ளியின் வாசல் கதவைப் பூட்டி விடுகின்றனர்.

தலைமையாசிரியர் உட்பட அனைத்து ஊழியர்களையும் விசாரித்தனர். எல்லோரின் பதில்களையும் குறித்துவைத்துக் கொண்டார் காவல் துறை அதிகாரி. கடைசியாக, நகை களவு போனதாகச் சொல்லப்படும் நேரத்தில் ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த நால்வரையும் தனித்தனியே அழைத்து, விசாரணையை மேற்கொண்டார்.

அறையில் இருந்த பழைய கோப்புகளை, தூசி தட்டி மாத, ஆண்டு வாரியாக எல்லாவற்றையும் கட்டி வைத்துக்கொண்டிருந்ததாகச் சொன்னார் பள்ளியைக் கூட்டிப் பெருக்கும் ஆயா.

மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகச் சொன்னார் கணக்கு ஆசிரியை.

மாதத் தேர்வுக்கான கேள்விகளைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்ததாகச் சொன்னார் ஓர் ஆசிரியை.

விலங்கியல் ஆசிரியைக்கு சாப்பாடு வாங்கி வைத்துவிட்டு, உடனே வெளியே சென்றுவிட்டதாகச் சொன்னார் பள்ளியின் பியூன்.

அவர்கள் சொன்னதை எல்லாம் குறித்துக்கொண்டு காவல் அதிகாரி, நேராகத் தலைமை ஆசிரியர் அறைக்குச்சென்று, அந்த நால்வரில் ஓர் ஆசிரியர் தான் நகையை எடுத்திருப்பதாகச் சொன்னார். அவர் கூறியதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர், அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார். ஆனால், காவல் அதிகாரியோ, அவர் தான் குற்றவாளி என்று சொல்ல, அந்த ஆசிரியையை அழைத்து, விசாரிக்கிறார் தலைமை ஆசிரியர். அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்கிறார்.

நகைகளைத் திருடிய ஆசிரியை யார்? காவல் அதிகாரி எப்படிக் கண்டுபிடித்தார்?

விடைகள்!

அ. நொடியில் எப்படி?

அந்த அறையில் இருந்த டாக்டரும், போலீஸ் அதிகாரியும் பெண்கள். சாமியார் மட்டுமே ஆண். சுடப்படுவதற்கு முன் அந்த நடிகை என்ன சொல்லிக் கத்தினார் என்பது நினைவில் இல்லையா? மீண்டும் அந்தச் சம்பவத்தைப் படியுங்கள்.

ஆ. குற்றவாளி யார்?

செய்தித்தாள் போடுபவன்தான் குற்றவாளி. இரண்டு பால் பாக்கெட்டுகள் இருக்கும்போது, இரண்டு நாட்களுக்கான செய்தித்தாளும் இருக்க வேண்டும் அல்லவா? அப்பெண்மணி இறந்த விஷயம் ஏற்கெனவே அவனுக்குத் தெரியும் என்பதால்தான், செய்தித்தாளை அவன் அந்தப் பங்களாவில் போடவில்லை என்பதை வைத்தே அவனைக் கண்டுபிடித்தார்.

இ. பொய் சொன்ன டீச்சர்

கேள்விகளைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகச் சொன்ன அந்த ஆசிரியை தான் குற்றவாளி. பள்ளி திறந்த மூன்றாம் நாளே மாதாந்திரத் தேர்வுக்கு எப்படிக் கேள்விகளைத் தயார் செய்ய முடியும்?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us