PUBLISHED ON : அக் 18, 2016

அ நிறம் | அளவு
பவள மல்லியின் தாவரப் பெயர் 'நிக்டாந்தஸ் அர்போர் டிரிஸ்ட்டிஸ்' (Nyctanthes arbortristis). மூன்று முதல் நான்கு மீட்டர் உயரமுள்ள சிறிய மரமாக வளரும். பவள மல்லிப் பூ சிவப்பு நிறக்காம்பும், ஐந்து முதல் ஏழு வெண்ணிற இதழ்களும் உடையது. நறுமணம் வீசும் பவழ மல்லிப் பூ பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரும். இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் கூரான முனைகளுடன் காணப்படும். கிளை நுனிகளில் பூக்கும் இதன் பூக்கள் வெண்ணிறமாயும் பவள நிறத்தில் காம்பைக் கொண்டவை. பவள மல்லி மரங்கள் நீர்த் தேக்கம் அதிகமில்லாத இடங்களில் நன்கு வளரும். பவள மல்லிப் பூவின் காம்பிலிருந்து பெறப்படும் பவள நிறச் சாயம் 'டுசார்' (Tussar) எனப்படும் பட்டுத் துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படுகிறது.
