PUBLISHED ON : அக் 18, 2016

சுவீடன் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus) உயிரினங்களின் வகைப்பாட்டை உருவாக்கியவர். தற்கால அறிவியல் வகைப்பாட்டு (Scientific Classification - சயின்டிஃபிக் கிளாசிபிகேஷன்) முறைக்கும், பெயர் முறைக்கும் (Nomenclature-நாமென்கிளேச்சர்) அடிப்படையை இவர் உருவாக்கினார். அழிந்துபோன மற்றும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிற உயிரினங்கள், தாவரங்களை வகைப்படுத்துதல் அறிவியல் வகைப்பாடு எனப்படும். உயிரினங்கள், தாவரங்களை இனம் கண்டறிய இது உதவுகிறது. இரு சொற்பெயரிடல் (Binomial Nomenclature - பைநாமியல் நாமன்கிளேச்சர்) முறையை கரோலஸ் லின்னேயஸ் அறிமுகப்படுத்தினார். அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக்கொண்டு 'ஸ்பீசிஸ் பிளான்டரம்' (Species Plantarum) என்ற நூலை இயற்றினார். இந்த நூல் வகைப்பாட்டு முறை குறித்து விளக்குகிறது. இரு சொற்பெயரிடல் என்றால், ஓர் உயிருக்கு இரண்டு பெயர்கள் அளித்தல். எடுத்துக்காட்டு : 'ஹோமோ சேப்பியன்ஸ்' (Homo Sapiens). ஹோமோ பேரினப் பெயர். சேப்பியன்ஸ் சிறப்பினப் பெயர். கரோலஸ் லின்னேயஸ் 'நவீன வகைப்பாட்டியலின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.
உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த இவர், ஐந்து படிநிலைகளில் (Levels - லெவல்ஸ்) உயிரினங்களை வகைப்படுத்தினார்.
திணை (ராஜ்ஜியம்) (Kingdom கிங்டம்)
வகுப்பு (Class கிளாஸ்)
வரிசை (Order ஆர்டர்)
பேரினம் (Genus - ஜீனஸ்)
