PUBLISHED ON : ஆக 28, 2023

வட அமெரிக்க நாடான மெக்சிகோவைப் பூர்விமாகக் கொண்ட இந்தச் செடி,
4 முதல் 5 அடி உயரம் வளரும். சிவந்த நிறத்தில் இருக்கும் இதனுடைய நீளமான மலர்கள் கீழ்நோக்கி மலர்ந்திருக்கும். மலர்கள் கொத்து கொத்தாக பூத்திருப்பது பார்ப்பதற்கு புஸ்வாணத்திலிருந்து வருகின்ற தீப்பொறிகளைப் போல இருக்கும். அதனால் இதை புஸ்வாணச் செடி (Fountain Plant), பட்டாசுச் செடி (Firecracker Plant), பவளச் செடி (Coral Plant) என்று அழைப்பர்.
ஒவ்வொரு பூவும் 2.5 முதல் 7.5 செ.மீ. நீளம் வரை வளரும். இவற்றின் இலைகள் 1 செ.மீ. நீளத்தில் கூர்மையான முட்கள் போல இருக்கும். இதன் அறிவியல் பெயர் ருசெலியா ஈகியுசெடிஃபார்மிஸ். பிளான்டாஜினாசியே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பூக்களில் தேன் நிறைந்திருப்பதால், பட்டாம்பூச்சிகளும், ஓசினி சிட்டுகளும் இவற்றைத் தேடி வரும். இவை களிமண்ணில், குறைந்த ஈரப்பதத்தில் கூட வளரும்.
ஆண்டு முழுவதும் பூப்பதால் வீட்டில், தோட்டத்தில் அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகின்றன.
