உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 06, 2016

அ நிறம் | அளவு
மஹாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போதிய மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், செயற்கை மழை உண்டாக்கும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள சீனா, அதை இந்தியாவுக்கு வழங்கத் தயாராக உள்ளது. செயற்கையாக கருமேகங்களை உருவாக்கி மழை பெய்யச் செய்வதற்கான, முதற்கட்ட நடவடிக்கைகளில் சீனாவை சேர்ந்த நிபுணர்கள் இறங்கியுள்ளனர். இதனால், நீர் மாசுபடும் அபாயம் உள்ளதாகச் சில நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
