sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : ஜன 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும் என கூறும் கருத்துக்கு அடிப்படைக் காரணம் என்ன?

ஆர். அஸ்வினி, 10ஆம் வகுப்பு, கோலப்பெருமாள் உயர்நிலைப் பள்ளி, சென்னை.


காலத்தை மாதம் என வகைப்படுத்தியது, நம் வசதிக்காக நாம் உருவாக்கியதுதான். இன்று நாம் பயன்படுத்தும் நாட்காட்டி, போப் பதின்மூன்றாம் கிரிகோரி (Pope Gregory XIII) என்பவரால் 1582இல் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் இருந்த நாட்காட்டியை ஜூலியன் நாட்காட்டி என்பார்கள். போப் கிரிகோரி செய்த சீர்திருத்தத்தின் விளைவாக, அக்டோபர் 4, 1582க்குப் பிறகு அக்டோபர் 15, 1582 என வந்தது. அதாவது புதிய நாட்காட்டியில்

11 நாட்கள் இருக்கவில்லை.

இந்தச் சீர்திருத்தம் செய்திருக்கவில்லை என்றால், இன்றைய கிரிகோரி நாட்காட்டியில் நவம்பர் 7ஆம் தேதி பிறந்த நபரை ஜூலியன் நாட்காட்டியில் அக்டோபர் மாதத்தில் பிறந்ததாகக் கூறுவோம். அதாவது அவருக்கு நவம்பர் மாத குணங்களுக்குப் பதிலாக அக்டோபர் மாதக் குணங்களைக் கற்பிதம் செய்வோம்.

ஆக, மாதம் என்பது நாமாக உருவாக்கியதே தவிர, இயற்கையாக உருவானது அல்ல. உலகில் எங்கு சென்றாலும் ஆண் என்றால் ஆண்தான்; பெண் என்றால் பெண்தான். இன்று ஜனவரி 1, 2018ஐ மார்கழி 17 என்றும் ரப்யூசானி 13 என்றும் கூறலாம். ஆனால், நாம் ஆணா, பெண்ணா என்பது இயற்கையின் இயல்பு. அதுபோல, நாம் அழகா, இல்லையா என்பது இயற்கை இயல்பு அல்ல; நமது கற்பிதம். அதுபோல மாதங்களின் அடிப்படையில் மனிதர்களின் குணத்தை வகுப்பதும் வெறும் கற்பிதமே அன்றி, ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும் எனக் கூறுவது தவறானது.

இறந்து போன ஒருவரின் உறுப்புகளை உயிருள்ளவருக்குப் பொருத்தினால் பழையபடி செயற்படுமா?

தி.ஸ்வேதாஸ்ரீ, 6ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.


கண்தானம், உடல் உறுப்பு தானம் போன்றவற்றில் இறந்தவர்களின் உடலுறுப்புகள்தான் பயன்படுகின்றன. உயிரோடு இருக்கும்போது, ரத்த ஓட்டம் காரணமாக, உடலுறுப்புகளின் திசுக்கள் பாதிப்படையாமல் இருக்கும். இறந்த பின்பு மெல்ல மெல்ல திசுக்கள் அழுக ஆரம்பிக்கும். எனவே, இறந்த உடன் சற்று நேரத்திலேயே உடல் உறுப்புகளை எடுத்து இன்னொருவருக்குப் பொருத்திவிட வேண்டும்.

உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த, ஆகஸ்ட் 13ஆம் தேதி, 'உடல் உறுப்பு தான' நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ரத்தம் தானம் கொடுக்கும்போது, உடலின் எந்தப் பகுதியில் இருந்து ரத்தம் அதிகம் பெறப்படும்? கொடுத்த பிறகு தலை சுற்றுமா?

ஆர். ஜானேஷ் சரவணன், 6ஆம் வகுப்பு, சின்மயா வித்யாலயா, வடவள்ளி, கோவை.


ரத்தம் என்பது உடலில் சுற்றும்படியான அமைப்பில் உள்ளது. எனவே, குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் ரத்தம் செல்லாது.

மூளை, இதயம், கணையம் எல்லாம் உடல் உறுப்புகள். அதுபோல திரவ வடிவ உறுப்புதான் ரத்தம். முக்கியமாக சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்தத் தட்டுகள் எனும் மூன்று பொருட்களை பிளாஸ்மா திரவத்தில் அடக்கிய ஒரு உறுப்புதான் ரத்தம்.

நமது உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருந்தாலும், ரத்த தானம் செய்யும்போது, வெறும் 250 மி.லி. முதல் 350 மி.லி. வரை ரத்தம் பெறப்படும். கிணற்றில் இறைக்க, இறைக்க நீர் ஊறுவது போல, மறுபடி மூன்றே வாரத்தில் கொடுத்த ரத்தம் அனைத்தும் ஊறிவிடும்.

கண் பார்வை இல்லாதவர்களால் கனவில் காட்சிகளைக் காண முடியுமா?

எம். முகம்மது இஸ்மாயில், 10ஆம் வகுப்பு, ஜான் டூயி மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி.


சில ஆண்டுகளுக்கு முன்பு, பார்வையற்ற நண்பர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்களுக்கு பிறக்கும்போது இல்லாமல் மெல்ல மெல்லத்தான் பார்வை இழப்பு ஏற்பட்டது. அவர்களது கனவில், பார்வை போனபோது அவருடைய உறவினர்கள் எந்த முகஜாடையோடு இருந்தார்களோ அதே வடிவில்தான் இருப்பார்களாம்! புதிய நபர்கள் கனவில் தோன்றும்போது கற்பனை முகஜாடைதான் வருமாம்!

பார்வையின்றிப் பிறப்பவர்களுக்கு சத்தம், தொடுவுணர்வு சம்பந்தமானவை மட்டுமே கனவாக வரும். கனவு என்பது வெறும் காட்சி உணர்வு மட்டுமல்ல. தொடுதல், கேட்டல் என ஐம்புலன்களின் உணர்வுகளும் கனவில் ஏற்படும். பார்வையற்றவர்களுக்குக் காட்சி வரவில்லை என்றாலும், மற்ற உணர்வுகள் கனவில் வரும்.

டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பிறவியிலேயே பார்வையற்றவர்கள், இடையில் பார்வை இழந்தவர்கள், பார்வை உள்ளவர்கள் எனத் தேர்வுசெய்து, நான்கு வாரம் அவர்கள் கண்ட கனவுகளைத் தொகுத்தபோது முடிவு வியப்பாக இருந்தது.

பார்வையுள்ளவர்கள் வெறும் 7% பேரும், பார்வை பறி போனவர்கள் 18% பேரும், பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் 26% பேரும் கனவில் சுவையுணர்வைக் கண்டதாகக் கூறினர். 40% முகர்தல், 67% தொடுதல், 93% கேட்டல் போன்ற உணர்வுகளைக் கனவில் அனுபவித்ததாகப் பார்வை இழந்தவர்கள் கூறினர். ஆனால், பார்வையுள்ளவர்கள் இடையே இது முறையே, 15%, 45%, 64% தான் இருந்தது. அதாவது, பார்வைக்கு ஈடாக மற்ற புலன்களின் உணர்வு பார்வையற்றவர்களுக்கு அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us