PUBLISHED ON : ஏப் 01, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் புகழ்பெற்ற கட்டடங்களில் ஒன்று, 1829-இல் கட்டப்பட்ட ஸ்காட்லாந்து யார்டு. லண்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் நிதி திரட்டுவதற்காகச் சில சொத்துகளை விற்கத் தொடங்கியுள்ளது. தற்போது, இக்கட்டடத்தைக் கேரளத்தைச் சேர்ந்த லுலு குழும தொழிலதிபரான யூசுப் அலி வாங்கியுள்ளார். இதை ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவு செய்து தங்கும் விடுதியாக மாற்றியுள்ளார். இங்கு, ஓர் இரவு தங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை கட்டணம் தரத் தயாராக உள்ளனர்.