PUBLISHED ON : ஏப் 01, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்களவைத் தேர்தலில், இந்த முறை தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் மட்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்குக் காரணம், அங்குள்ள 170 விவசாயிகள் வேட்புமனுத் தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், தேர்தலில் நின்று எதிர்ப்பைக் காட்டும் முடிவை அறிவித்தனர். வேட்பாளர்கள் அதிகம் என்பதால், வேறுவழியின்றி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற உள்ளது.