
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் வாழ்ந்த ஊன் உண்ணி கங்காரு வகைகளில் மிகப் பெரிய விலங்கு, இந்த 'டாஸ்மானியன் டெவில்' (Tasmanian Devil). டிங்கோஸ் எனப்படும் ஆஸ்திரேலிய நாய்களாலும், மனிதத் துன்புறுத்தல்களாலும் இந்த உயிரினம் அழிவை நோக்கிச் செல்கிறது.
இதில் மிச்சமிருப்பவை ஆஸ்திரேலியாவின் தனித்த தீவுப் பகுதியான டாஸ்மானியாவில் வாழ்ந்து வருகின்றன. இதனால், அந்தப் பகுதியை அரசு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, அதைப் பாதுகாத்து வருகிறது.
- நன்றி பிபிசி எர்த்

