உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 02, 2018

அ நிறம் | அளவு
பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என அழைக்கப் படுகின்றன. இந்நாடுகளில் சமூக முன்னேற்றத்திற்கு உழைக்கும் இளைஞர்களுக்கு, பிரிட்டன் அரசி எலிசபெத், 'குயின்ஸ் யங் லீடர்ஸ்' விருது வழங்கி கௌரவித்து வருகிறார்.
2018ஆம் ஆண்டுக்கான விருதுக்கு 240 இளம் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மலேசியாவைச் சேர்ந்த சிவ நாகப்பன் விஸ்வேஸ்வரன் என்ற கல்லூரி மாணவரும் ஒருவர்.
இவர், ஒரு பக்கம் மட்டும் அச்சான காகிதங்களை, தனது நண்பர்களுடன் சேகரித்து, அதில் நோட்டுப்புத்தகங்கள் தயாரித்து, ஏழை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். இரண்டரை ஆண்டுகளில் சுமார் 4.5 டன் காகிதங்களை மறுபயன்பாட்டிற்கு விட்டுள்ளார். இதன் மூலம் பல மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
