தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விழிப்புணர்வு இளைஞர்!

விழிப்புணர்வு இளைஞர்!

விழிப்புணர்வு இளைஞர்!


PUBLISHED ON : ஜூன் 24, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரமேஸ்வரன் மாரியப்பன், தூத்துக்குடி

இந்திய ஊர்வனப் பாதுகாப்பு மற்றும் ஊர்வனப் பள்ளி

(Reptile Conservation of India)



ஊர்வனவற்றின் மீதிருந்த நேசத்தால், அதன் பாதுகாவலராக மாறியவர் தான் ரமேஸ்வரன் மாரியப்பன். கடந்த 20 ஆண்டுகளாக இத்துறையில் ஆராய்ச்சிகள் செய்து வருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய வறண்ட பூமியுமே அவரது ஆய்வுக்களம்.

இதுவரை பல அறியப்படாத ஊர்வனங்கள் சார்ந்த இனப்பெருக்கம், வாழ்க்கை அமைப்பு, அதன் பாதுகாப்பு என, பலவற்றைக் கண்டுபிடித்து வருகிறார். இவருடைய களப்பணியில் பார்த்த விஷயங்களை ஆராய்ச்சி மற்றும் அனுபவக் கட்டுரைகளாகவும் எழுதி வருகிறார்.

பொதுமக்கள் மற்றும் பிற சூழலாளர்கள் என, அனைவரிடமும் ஊர்வன குறித்த அறிவைப் பிரசாரம் செய்து வருகிறார். ஊர்வனப் பாதுகாப்பு மற்றும் மனிதர்களுக்கு நச்சுப்பாம்புகளால் ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதுமே ரமேஸ்வரனது முக்கியப்பணி. மகுடி ஊதி பாம்புகளைப் பிடிக்கும் மக்களைப் பற்றி 'கிளை தேடும் கொடிகள்' எனும் நூலை எழுதியுள்ளார்.

அவர் கட்டமைத்துள்ள 'ஊர்வனப்பள்ளி', ஓர் ஊர்வனங்கள் சார்ந்த அடிப்படைக் கல்வியை வழங்குகிறது. அதோடு ஆராய்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளுக்கான வழிவகைகளையும் உருவாக்கும். ஊர்வன பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது மட்டுமே அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பதே ரமேஸ்வரனின் ஆழமான நம்பிக்கை.

- ந.ச. மனோஜ்

பாம்பு விஷமுறிவு ஆராய்ச்சியாளர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us