தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மோசமான காட்டுத் தீ விபத்துகள்!

மோசமான காட்டுத் தீ விபத்துகள்!

மோசமான காட்டுத் தீ விபத்துகள்!


PUBLISHED ON : செப் 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவைப் பொறுத்த அளவில், எப்போதெல்லாம் காட்டுத்தீ விபத்துகள் ஏற்பட்டன என்ற குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விரிவான தகவல்கள் கிடைப்பதில்லை. அரசின் பொதுத்தளத்தில் இத்தகவல்களைப் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் இந்திய வனங்களைப் பாதிப்புக்குள்ளாக்கிய சில முக்கியமான காட்டுத்தீ அழிவுகள் பற்றிய தகவல்கள் இங்கே:

1995: உ.பி (தற்போதைய உத்தரகாண்ட்) மாநிலத்தில் சுமார் 3,75,000 ஹெக்டேர் (9,26,645 ஏக்கர்)

1999: கங்கை -யமுனை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் 80,000 ஹெக்டேர் (1,97,684 ஏக்கர்),

2008: மகாராஷ்டிரத்தில் 10,000 ஹெக்டேர் (24,710 ஏக்கர்) வனம் காட்டுத்தீயால் பாதிப்பிற்கு உள்ளானது.

2010: இமாச்சலப் பிரதேசத்தில் 19,000 ஹெக்டேர் (46,950 ஏக்கர்)

தேனி வனப்பகுதியில் ஆண்டுதோறும் காட்டுத்தீ ஏற்படும் என்ற தகவலைப் பலரும் அறிவர். அதையும் மீறி, மனிதத் தவறு மற்றும் அறியாமையின் காரணமாக குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பத்துப்பேர் இறந்ததை அறிவோம். காட்டுத்தீ பற்றிய பெரும் விவாதத்தை இச்சம்பவமே ஏற்படுத்தியது. அதேநேரம், மனிதர் அல்லாத பிற உயிர்கள் இறந்துபோவது பற்றியும், இயற்கை வளங்கள் நிரந்தரமாகச் சிதைவது குறித்தும் நாம் சிந்திக்கவில்லை. அவற்றைத் தடுப்பதன் அவசியம் பற்றியும் விவாதிக்க நாம் தயாராக இல்லை என்பது பெரும் சோகம்.

ஆனால், அமேசான் நெருப்பு, உலகின் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற சூழல் உள்ளது. எனவே, உலக மக்கள் அனைவரும் இணைந்து செயற்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால்தான் இத்தகைய விவாதங்கள் இன்று வெடித்துக் கிளம்புகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us