தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்தியாவில் அதிகரிக்கும் காட்டுத்தீ விபத்துகள்

இந்தியாவில் அதிகரிக்கும் காட்டுத்தீ விபத்துகள்

இந்தியாவில் அதிகரிக்கும் காட்டுத்தீ விபத்துகள்


PUBLISHED ON : செப் 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு 24,817 காட்டுத்தீ விபத்துகள் ஏற்பட்டன. ஆனால், 2018-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 37,059-ஆக உயர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் சுமார் 50% அளவிற்கு விபத்துகள் அதிகரித்துள்ளது கவலை தரக்கூடிய செய்தி.

உத்தரகாண்ட் மாநிலத்தில், 2016-ஆம் ஆண்டு பற்றிய காட்டுத்தீயில் 8,600 ஏக்கர் வனம் எரிந்து அழிந்தது. கடந்த ஆண்டு நமது மாநிலத்தில் இருக்கும் தேனி காட்டிற்குள் சுற்றுலா சென்ற பயணிகளில் பத்துப் பேர் காட்டுத்தீயில் சிக்கி இறந்தனர். இத்தகைய விபத்துகள் எதிர்காலத்தில் மேன்மேலும் அதிகரிக்கும் என்று அறிவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பந்திப்பூர் காட்டுத்தீ விபத்திற்குக் காரணமானவர்கள் யார், தோராயமாக எத்தனை மரங்கள், பறவைகள், விலங்குகள் உயிரிழந்தன, நிரந்தரப் பாதிப்புகள் என்னென்ன என்ற கேள்விகளுக்கு இன்றுவரை நம்மிடம் பதில் இல்லை. காட்டுத்தீ விபத்துகளைத் தடுக்கவும், நடந்தால் விரைந்து தீயை அணைக்கவும் சர்வதேசத் தரமான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம். சட்டவிரோத மரக்கடத்தல், வேட்டை போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிப்பது, தொழில்நுட்ப முன்னேற்றங்களைக்கொண்டு, வனத்தை முழுமையாகக் கண்காணிப்பது ஆகியவற்றின் மூலம் இம்மாதிரியான அழிவுகளைக் குறைக்கலாம். அதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பதை இயற்கையும், அரசும்தான் தீர்மானிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us