தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு - உண்மையா?

உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு - உண்மையா?

உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு - உண்மையா?


PUBLISHED ON : மே 27, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒளவையார் பாடிய 'கொன்றைவேந்தன்' அனைவரும் அறிந்ததே. நீதிக்கருத்துக்கள் அடங்கிய நூல் அது.

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

என்று அகர வரிசையில் தொடங்கி,

'கற்பெனப்படுவது சொல் திறம்பாமை' என்று பாடியிருப்பார். அதாவது கற்பை பெண்ணில் உடலோடு தொடர்புப்படுத்தாமல், சொல்லைத் திரித்து, அல்லது மாற்றிப் பேசாமல் இருப்பதே கற்பு என்று கூறியிருப்பார். அதுவும் இருபாலருக்கும் பொருந்துவது போல், சிலம்பி என்ற பெண் கொடுத்த கூழுக்காக கவிபாடியவர் ஒளவை. பசியின் கொடுமையை அறிந்தவர்.

அப்படிப்பட்ட ஒளவையார் எப்படி

'உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு'

என்று பெண்களை மட்டும் பார்த்து பாடியிருக்க முடியும்?

'பெண்டிர்க்கு' என்பதற்கு பதிலாய் 'பண்டிக்கு' என்றே ஒளவையார் பாடியிருக்க வேண்டும். பண்டி என்பது வயிறு.

ஆண், பெண் யாராக இருந்தாலும், பிடித்த உணவைத் தேவையான அளவு மட்டும் உண்ண வேண்டும். மூச்சு முட்ட சாப்பிட்டால் வயிறு பிரச்னையாகி விடும் என்பதே ஒளவையாரின் கருத்து. அவர் பாடியது அனைவருக்குமானத. அச்சில் பிரசுரித்தவர்கள். அதைப் பெண்கள் தலையில் மட்டும் ஏற்றி பிரச்னைக்குரியதாய் மாற்றி விட்டார்கள்.

(பண்டி என்பதற்கு வயிறு, உடல் என்று பொருள் கூறுகிறது 'உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்' வெளியிட்டிருக்கும் தமிழ் அகர முதலி)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us