PUBLISHED ON : அக் 18, 2016

அ நிறம் | அளவு
ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழர்களோ பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் 'வளரி' இது வளைந்த மரத்தடி போன்று இருக்கும். வளைந்த வடிவில் உள்ளதால் காற்றில் வேகமாகச் சுழன்று செல்லும். மான் வேட்டையின் போதும் இது பயன்படுத்தப்படும். இரும்பிலும் செய்யப்படும். ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட 'பூமராங்' (Boomerang) என்ற ஆயுதத்தின் வடிவமைப்பை
உடையது இது. தமிழ்நாட்டில் சிவகங்கை, பட்டுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உபயோகப் படுத்தப் பட்டு இருக்கிறது. வளரியைப் போன்ற ஆயுதங்கள் வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்ற பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன. பண்டைய போர்களில் வளரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
