PUBLISHED ON : அக் 18, 2016

வெள்ளி மறைப்பு என்பது, சூரிய கிரகணம் போன்ற ஒரு நிகழ்வு. சூரிய கிரகணத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும். அதுபோல வெள்ளி மறைப்பில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வெள்ளி கிரகம் வலம் வரும். இதன் காரணமாக வெள்ளி சின்ன கரும்புள்ளி போல சூரியனின் ஓரத்தில் மெல்ல சுற்றிச் செல்லும். சுமார் ஆறு மணி நேரம் வரை நிகழும் வெள்ளி மறைப்பை, நாம் கண்களால் காண முடியும். வெள்ளி கிரகத்தின் விட்டம் 12,092 கி.மீ. இது சந்திரனை விட நான்கு மடங்கு அதிகம். வெள்ளி, சந்திரனைவிட மிகத் தொலைவில் உள்ளதால், பார்வைக்கு சிறியதாகத் தெரிகிறது. இதன் ஒரு நாள் என்பது 244 பூமி நாட்கள். வெள்ளி மறைப்பு என்பது கணிக்கப்படும் வானவியல் நிகழ்வுகளில் மிகவும் அரிதானது. 548 நாட்களுக்கு ஒரு முறை, பூமிக்கு அண்மையில் வெள்ளி வந்தாலும் கூட, வெள்ளி கோள் மறைப்பு வெகு அரிதானது. வெள்ளியின் பாதை, 3.4 டிகிரி சாய்வாக அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளில் சராசரியாக 14 முதல் 18 முறை வரை வெள்ளி மறைப்பு நிகழும். இனம் (Species ஸ்பீசிஸ்)
