தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை

2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை

2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை


PUBLISHED ON : நவ 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு அகராதி, 2016ம் ஆண்டின் சிறந்த ஆங்கில வார்த்தையாக 'post-truth' என்னும் வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், மக்களால் பயன்படுத்தப்படும் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2016ம் ஆண்டின் சர்வதேச வார்த்தையாக, post-truth என்னும் வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது.

'நடுநிலையான உண்மையை விட, மக்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, பொதுக்கருத்து உருவாக்கும் சூழல்' (Relating to or denoting circumstances in which objective facts are less influential in shaping public opinion than appeals to emotion and personal belief) என இந்த வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதி விளக்கம் கொடுத்துள்ளது.

சர்வதேச சிறந்த வார்த்தையைப் பொறுத்தவரையில் இந்த அகராதியின் பிரிட்டன், அமெரிக்க பதிப்புகள் சில நேரங்களில் வேறு வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும். ஆனால் இந்த ஆண்டு, இரண்டு பதிப்புகளும் ஒரே வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us