PUBLISHED ON : ஜன 06, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை.
உண்மை. சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன. சிலந்திகளுக்கு அவற்றின் வலைகளின் மூலைகளே அதற்கு மிகப் பிடித்த இடம். அதன் உமிழ்நீராலேயே அது வலையைப் பின்னும். வலையில் ஏதேனும் இழை அறுந்தாலும் திரும்பவும் அந்த இடத்தை மிக அழகாகப் பின்னி விடும். பெரிய கட்டடக்கலை நிபுணர் போல் தன் வலையைத் தயார் செய்யும்.