sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

உயிரியல் உலகம்: ரீலா, ரியலா?

/

உயிரியல் உலகம்: ரீலா, ரியலா?

உயிரியல் உலகம்: ரீலா, ரியலா?

உயிரியல் உலகம்: ரீலா, ரியலா?


PUBLISHED ON : ஜன 20, 2025

Google News

PUBLISHED ON : ஜன 20, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரநாய் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகிறது.

தவறு. மரநாய் (Weasel) ஒரு பாலூட்டி விலங்கு. இவை அன்டார்டிகா, ஆஸ்திரேலியா, அதைச் சுற்றியுள்ள தீவுகளைத் தவிர உலகெங்கும் வாழ்கின்றன. சிறிய வகை உயிரினங்களான எலி, அணில், பூனை, பாம்பு, கோழி, முயல் ஆகியவற்றைக் கொன்று உண்ணும். இவை வேட்டையாடுவதில் மிகவும் வல்லவை. மெலிந்த உடல் காரணமாக விரைவாக ஓடும். சந்துகளிலும் கூட நுழைந்து செல்லும்.

மரநாய் ஒரு முறைக்கு 4 முதல் 8 குட்டிகள் வரை ஈனும். குட்டிகளை 5 வாரங்கள் வரை மிகவும் கவனமாகப் பாதுகாக்கும். தாய்ப் பாசம் மிக்கது. குட்டிகளை ஆபத்திலிருந்து காக்க கடுமையாகப் போராடும். இவை அழுகிய மரங்களின் அடிப்பாகம், பாறைகள் உள்ளிட்டவற்றில் வாழும். பொதுவாக இவை பகலில் தூங்கி, இரவு நேரங்களில் வேட்டையாடுகின்றன.

தமிழகத்தின் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. மரங்களில் விரைந்து ஏறும் ஆற்றலுடையவை. நன்றாக நீந்தவும் செய்யும். இவை இரையைக் கவரப் பலவிதமான ஒலிகளை எழுப்பக்கூடியவை.






      Dinamalar
      Follow us