PUBLISHED ON : ஜன 20, 2025

நான் கொழுப்பில் கரையக்கூடிய ஒரு வைட்டமின்.
முட்டைக்கோஸ் முதலிய பச்சைக் காய்கறிகள், கீரை, சோயா பீன்ஸ், சில நொதிக்கப்பட்ட உணவுகளில் இருப்பேன்.
உங்கள் உடலில் இருக்கும் சில பாக்டீரியாவாலும் என்னை உருவாக்க முடியும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி ஆன்டிபயாடிக் எடுத்துக் கொண்டீர்களேயானால் உங்கள் உடலில் என்னை உருவாக்குகின்ற நல்ல பாக்டீரியா அழிந்துவிடும். இதனால் எனது உற்பத்தி பாதிக்கப்படும்.
தினசரி ஆண்களின் உடலுக்கு 120 மைக்ரோகிராமும், பெண்களின் உடலுக்கு 90 மைக்ரோகிராமும் தேவைப்படுகிறேன்.
என்னைக் கொழுப்புச்சத்துள்ள உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உங்கள் உடலால் எளிதாக உறிஞ்சிக் கொள்ளப்படுவேன்.
நான் உங்கள் உடலில் போதுமான அளவு இல்லை என்றால் ரத்தம் உறையாது. ஏதேனும் காயம் ஏற்பட்டால் ரத்தப் போக்கு நிற்காது. இது மிகவும் ஆபத்தானது.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நான் அவசியம். நான் குறைவாக இருந்தால் உங்களுக்கு எலும்புப்புரை (Osteoporosis) ஏற்படலாம். எலும்பின் தாது அடர்த்தி குறைந்து, முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
விடைகள்: வைட்டமின் கே