உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 22, 2016

அ நிறம் | அளவு
தகுந்த வரத்தை வாங்கிடவா
தலைகீழாகத் தொங்குகிறாய்?
பகலில் எவரோ திட்டினரா?
இரவில் மட்டும் சுற்றுகிறாய்.
குடைபோல் சிறகை விரித்தபடி
குழந்தை போலே ஆடுகிறாய்.
குட்டிச் சத்தம் கேட்டாலும்
'கூகீ' என்றே கத்துகிறாய்.
பழந்தரும் மரத்தின் கிளைகளிலே
பகலில் முழுக்க உறங்குகிறாய்.
பார்ப்பதற்கு எலி முகமாய்
ஏனோ தோற்றம் தருகின்றாய்
முதுகில் எலும்பு இருக்கிறதே
முயற்சிகள் உண்டா உன்னிடத்தில்?
முயன்று முழுதாய்ச் செய்தாலே
தோல்விகள் வருமா கிட்டத்தில்?
- இ.எஸ்.லலிதாமதி
