sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

'கெள'கும்பர்

/

'கெள'கும்பர்

'கெள'கும்பர்

'கெள'கும்பர்


PUBLISHED ON : செப் 12, 2016

Google News

PUBLISHED ON : செப் 12, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கெளகும்பர்' பச்சடி சாப்பிட்டிருக்கிறீர்களா? சாப்பிட்டிருப்பீர்கள். பச்சடியாக இல்லாமல் வெறுமனே கூட சாப்பிடலாம். 90 சதவீதம் நீர் சத்து நிரம்பியது. நார் சத்தும் நிறைந்தது. கெட்ட கொழுப்பைக் குறைக்கக் கூடியது. இரும்பு, வைட்டமின்கள், மெக்னீஷியம் போன்ற சத்துகள் உள்ளன. எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. கொழுப்பு குறைவு. உடலுக்கு குளிர்ச்சி தரும்.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த அந்த கெளகும்பர் காய் நீங்கள் அறிந்த வெள்ளரிக்காய்தான். வெள்ளரிக்காயை (Cucumber) ஆங்கிலேயர்கள் முதலில் 'கெளகும்பர்' (cowcumber) என்றுதான் அழைத்தார்களாம்.

வெள்ளரிக்காயின் தாயகம் இந்தியா. வெள்ளரி 3000 வருடங்களாக பயன்பாட்டில் இருக்கிறது. இவற்றில் நூற்றுக்கணக்கான வகைகள் உண்டு. விதையுள்ள வெள்ளரி வாயுவை உண்டாக்கும்.

ரோம் அரசர் டைபிரியஸ் (Emporer Tiberius) தினமும் இதை உணவாக எடுத்துக்கொள்வாராம். குக்குமிஸ் (cucumis) என்ற லத்தீன் சொல்லில் இருந்து குக்கும்பர் என்ற சொல் வந்தது. இதன் அறிவியல் பெயர் குக்குமிஸ் சாட்டிவஸ் (Cucumis sativus).

உலக அளவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில் நான்காவது இடம் வெள்ளரிக்கு.

சமைக்காமல் அப்படியே சாப்பிடக் கூடிய காய்கறி இது. கண் எரிச்சல், கண்ணைச் சுற்றி கருவளையம் வந்தால் வெள்ளரியை வட்டமாக நறுக்கி கண் மீது வைத்துக்கொள்வார்கள். அதன் குளிர்ச்சி ஆறுதல் தரும்.






      Dinamalar
      Follow us