sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/அன்றாடம் உண்ணலாம்!

அன்றாடம் உண்ணலாம்!

அன்றாடம் உண்ணலாம்!


PUBLISHED ON : மார் 26, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துவரை

ஆங்கிலப் பெயர்கள்: 'ரெட் கிராம்' (Red Gram), 'பீஜியன் பீ' (Pigeon Pea), 'தூர் தால்' (Toor Dhal)

தாவரவியல் பெயர்: 'காஜானஸ் இன்டிகஸ்' (Cajanus indicus)

தாவரக் குடும்பம்: 'ஃபாபாசியே' (Fabaceae)

நாம் அன்றாடம் உண்ணும் உணவில், துவரம் பருப்பு முக்கிய இடம் வகிக்கிறது. உடலுக்குத் தேவையான புரதம், மாவு, (Carbohydrate) எரிமம் போன்ற பல ஆற்றல் சத்துகள் நிறைந்தது.

* துவரைச் செடி 1 மீட்டர் முதல் 4 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.

* வளமான மண்ணில் செழித்து வளரும்.

* இதன் தாயகம் வட ஆசியா.

* ஓராண்டுப் பயிராகவும் 3 ஆண்டுப் பயிராகவும் வளர்கிறது.

* உளுந்து, வேர்க்கடலை, பருத்தி, பச்சைப் பயறு போன்ற செடிகளின் இடையே ஊடு பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது.

* நீள வடிவிலான எதிரடுக்கில் அமைந்த இலைகளை உடையது.

* பூ மஞ்சள் நிறத்தில் ஊதா, சிவப்பு நிற இதழ்களுடன் இருக்கும்.

* ஆறு மாதத்தில் பூக்க ஆரம்பிக்கும்; கொத்தாகக் காய்க்கும்.

* காய்கள் முற்றிய பின் உலர்த்தப்பட்டு, துவரம் பருப்பு எடுக்கப்படும்.

* விதை மூலம் இனப்பெருக்கம் ஆகிறது.

* செடியின் இலைகள், பருப்பின் தோல்பகுதி ஆகியவை கால்நடைத் தீவனமாகப் பயன்படுகின்றன.

* உலகின் மொத்த உற்பத்தியில், 82 சதவீதம் இந்தியாவில் விளைகிறது.

- கி.சாந்தா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us