sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

மரங்களை நகர்த்தலாம்

/

மரங்களை நகர்த்தலாம்

மரங்களை நகர்த்தலாம்

மரங்களை நகர்த்தலாம்


PUBLISHED ON : ஆக 21, 2017

Google News

PUBLISHED ON : ஆக 21, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு மரத்தை வேருடன் இடம் மாற்றி வைக்கும் தொழில்நுட்பம் மேலைநாடுகளில் பிரபலம். இப்போது நம் நாட்டிலும் வந்துவிட்டது. ஐதராபாத்தை சேர்ந்த உதயகிருஷ்ணா என்பவர், வாதா அறக்கட்டளை (Vata Foundation) மூலம் இப்பணிகளைச் செய்கிறார்.

நன்கு வளர்ந்த பெரிய மரங்களைக்கூட ஓரிடத்தில் இருந்து பெயர்த்து மற்றொரு இடத்துக்கு நகர்த்தி, நட்டு வளர்க்கிறார்கள். பெரும்பாலும் மரங்கள் புது இடத்திலும் பிழைத்துக்கொள்கின்றன. ஐதராபாத்தின் ஒரு சாலை விரிவாக்கப் பணியில், 300 சாலையோர மரங்கள் வெட்டப்படக் காத்திருந்தன. ஆனால் வாதா அமைப்பினர் இவ்விவகாரத்தில் தலையிட்டு, அம்மரங்களைப் பெயர்த்தெடுத்து சாலையை இரண்டாகப் பிரிக்கும் பகுதியில் வழக்கமான செடிகளுக்குப் பதிலாக நட்டு காப்பாற்றிவிட்டனர். பசுமையை அழிக்காமலும் நகரமயமாக்கல் நடக்க முடியும் என்பதற்கு இச்சம்பவம் மிகச்சிறந்த உதாரணம். இப்போது ஆந்திர மாநிலம் முழுவதிலுமிருந்து மரங்களைக் காப்பாற்ற அழைப்புகள் வருகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான மரங்களை இடம் மாற்றி காப்பாற்றியுள்ளனர் இந்த அமைப்பினர்.






      Dinamalar
      Follow us