உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 22, 2018

அ நிறம் | அளவு
கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஒட்டாவா நகரில் நடைபெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு தமிழர்களை வாழ்த்தினார். கனேடிய அரசு ஜனவரியைத் 'தமிழ் பாரம்பரிய மாதமாக' அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக பொங்கல் விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட ஜஸ்டின், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார். அறுவடைத் திருநாளான பொங்கல் விழாவைக் கொண்டாடியதுடன், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிலம்பம் சுற்றும் விளையாட்டில் கலந்துகொண்டு, சிலம்பம் விளையாடியும் மகிழ்ந்தார். பொங்கல் பற்றி தன் டிவிட்டர் பக்கத்திலும் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற தமிழ் வாக்கியத்தை ஆங்கில எழுத்துகளில் (Iniya Thai Pongal Nalvazhthukkal) எழுதி அசத்தியிருக்கிறார் கனேடிய பிரதமர்.
