தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சாம்பியன் சாய்னா

சாம்பியன் சாய்னா

சாம்பியன் சாய்னா


PUBLISHED ON : மார் 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

சாய்னா நேவால்

17 மார்ச் 1990

ஹிஸார், ஹரியாணா

இந்தியாவில் பலருக்கும் அறிமுகமாகாமல் இருந்த விளையாட்டு, பேட்மின்டன். அதில் இந்தியாவின் புகழை உலக அளவில் கொண்டு சேர்த்த பெருமை சாய்னாவுக்கும் உண்டு. சீன வீராங்கனைகளின் ஆதிக்கத்தில் இருந்த 'பேட்மின்டன் உலக சாம்பியன்' பட்டத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்து பெருமை சேர்த்ததும் இவர்தான்!

சாய்னாவின் பெற்றோர் இருவரும் தேசிய அளவில் பேட்மின்டனில் சாதித்த வீரர்கள். அதனால், 8 வயது முதல் அவருக்குத் தீவிர பயிற்சி கிடைத்தது. விடாமுயற்சியுடனும் தீவிர அர்ப்பணிப்புடனும் அதனைக் கற்றுக்கொண்டு 14 வயதில் தேசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார். 2006இல் ஒலிம்பிக்கில் கால் இறுதி வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் இவருக்கே சொந்தம்.

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது, உலக அளவில் முதல் தரவரிசை என்பது சாய்னாவின் இலட்சியக் கனவு. அதன்படி, உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம், ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்று தொடர்கிறது இவரது சாதனைப் பட்டியல்.

சாய்னா, இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் தொடரின் மூலம் 2019ஆம் ஆண்டின் முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளார். இதற்கான இறுதிப் போட்டியில், மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் நாட்டின் கரோலினா மார்லினை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, இந்தத் தொடரை வென்ற முதல் இந்திய வீராங்கனையும் இவரே!

2009: அர்ஜுனா விருது

2010: பத்ம ஸ்ரீ

2010: ராஜீவ் காந்தி கேல் ரத்னா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us