தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : மார் 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

மார்ச் 13, 1733 - ஜோசப் பிரிஸ்ட்லி பிறந்த நாள்

இங்கிலாந்து நாட்டு வேதியியல் அறிஞர். இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானது, ஆக்சிஜன் வாயு. கார்பன் டை ஆக்சைடு பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை.

மார்ச் 14, 1879 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாள்

நவீன இயற்பியலின் தந்தை. 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியலாளர். குவாண்டம், அண்டவியல் துறைகளில் பங்காற்றினார். கோட்பாட்டு இயற்பியலில் நோபல் பரிசு பெற்றார்.

மார்ச் 15, 1983 - உலக நுகர்வோர் உரிமைகள் நாள்

அடிப்படை உரிமைகளைக் கேட்பது; சந்தைக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவது போன்ற பல உரிமைகள் நுகர்வோருக்கு உண்டு. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நுகர்வோர் உரிமைகள் நாள் கொண்டாடப்படுகிறது.

மார்ச் 16, 1750 - கரோலின் ஹெர்ச்செல் பிறந்த நாள்

ஜெர்மன் வானியலாளர். வானியல் அறிஞர் வில்லியம் ஹெர்ச்செலின் தங்கை. இருவரும் வானியலில் புரட்சியை ஏற்படுத்தினார்கள். சில வால்மீன்களைக் கண்டுபிடித்து, வரலாற்றில் கரோலின் இடம்பிடித்தார்.

மார்ச் 16, 1789 - ஜார்ஜ் சைமன் ஓம் பிறந்த நாள்

ஜெர்மன் இயற்பியலாளர். மின்சாரத்தில் மின் அழுத்தத்திற்கான தொடர்பை வரையறுத்தார். அது, 'ஓம்ஸ் விதி'(Ohms) என அழைக்கப்படுகிறது. மின்தடைக்கான அலகு இவர் பெயராலேயே 'ஓம்' என குறிக்கப்படுகிறது.

மார்ச் 17, 1962 - கல்பனா சாவ்லா பிறந்த நாள்

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை. இரண்டாவது விண்வெளிப் பயண விபத்தில் உயிரிழந்தார். இவரைச் சிறப்பிக்க 2004ஆம் ஆண்டு முதல், இளம் பெண் விஞ்ஞானிகளுக்கு, இவர் பெயரால் விருது வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us