தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/தீக்குச்சியைத் துரத்து!

தீக்குச்சியைத் துரத்து!

தீக்குச்சியைத் துரத்து!


PUBLISHED ON : மே 20, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரத் தீக்குச்சிகளை எடுத்து, பாதி பாதியாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். (மருந்தை அகற்றி விடுங்கள். அதற்குப் பதிலாகத் துடைப்பத்தில் இருக்கும் ஈர்க்குச்சியையும் சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளலாம்.)

ஒரு பெரிய தட்டில் நல்ல தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். இப்போது, சற்றே நீளமான ஓர் ஈர்க்குச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் நுனியில் துணி துவைக்கும் சோப்பை கொஞ்சம் எடுத்து உருண்டையாக்கிச் செருகுங்கள்.

தட்டில் இருக்கும் தண்ணீரில் தீக்குச்சித் துண்டுகளைப் போடுங்கள். அவை மொத்தமாக மிதக்கும். அவற்றின் நடுவில் பெரிய ஈர்க்குச்சியின் சோப்பு உருண்டையை நுழையுங்கள்.

என்ன நடக்கிறது?

தீக்குச்சித் துண்டுகள் அத்தனையும், இருக்கும் இடத்தை விட்டு விலகி ஓடும்.

பயந்தாங்குள்ளிக் குச்சிகள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us