
ஒரு செவ்வக வடிவிலான மரப் பலகை. ஒரே அளவிலான ஒன்பது இரும்பு ஆணிகள். ஒரு சிறு மரக்கட்டைத் துண்டு. மேற்படி பொருட்களைத் தயார் செய்துகொள்ளுங்கள். இசைக் கருவி ஒன்றை உருவாக்கப் போகிறீர்கள்.
செவ்வகப் பலகையில் 8 ஆணிகளை அறைய வேண்டும். ஒரே நேர்கோட்டில் அவை இருக்க வேண்டும். இன்னொரு விஷயம், முதல் ஆணி என்ன உயரத்தில் இருக்கிறதோ அதைவிடக் கொஞ்சம் குறைவாக அடுத்தது இருக்கணும். படிப்படியாக ஆணிகளின் உயரம் குறையணும்.
மிச்சம் இருக்கும் ஆணியை மரக்கட்டைத் துண்டில் அடித்துக் கொள்ளுங்கள். அந்தத் துண்டைப் பிடித்துக்கொண்டு, ஆணியின் தலைப் பகுதியால் பலகையில் நிற்கும் ஆணிகளின் மேல் மெல்ல அடியுங்கள். ஒவ்வொரு ஆணியாக அடித்துப் பாருங்கள். ஒலியின் சுருதி மாறுவதைக் கேட்க முடிகிறது அல்லவா? வரிசையாகத் தட்டும்போது, ஸ ரி க ம ப த நி என்கிற ஒலிகளைக் கேட்கலாம்.
மெல்லத் தட்டித் தட்டி ஏதேனும் சுலபமான பாடலையே இதில் வாசித்துவிட முடியும்.

