தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ச்சீஸ்... ஸ்மைல் ப்ளீஸ்ஸ்ஸ்....

ச்சீஸ்... ஸ்மைல் ப்ளீஸ்ஸ்ஸ்....

ச்சீஸ்... ஸ்மைல் ப்ளீஸ்ஸ்ஸ்....


PUBLISHED ON : ஆக 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19



சுதந்திரம் வாங்கப் போராடிய எண்ணற்ற தேசத் தலைவர்களையும் நமக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளையும் நாம் நேரில் பார்த்தது கிடையாது. அவர்களை எல்லாம் கண்முன் நிறுத்துவது புகைப்படங்கள்! கருப்பு, வெள்ளையாக மட்டும் இருந்த புகைப்படங்கள் காலங்கள் தாண்டி செல்ஃபிக்களாக மாறிவிட்டன. இருந்தாலும், ஞாபகங்களையும் நினைவுகளையும் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக புகைப்படங்கள் என்றும் நம்முடன் இருக்கின்றன.

கருப்புப் போர்வைக்குள் ஒளிந்து, 'ஸ்மைல் ப்ளீஸ்' என நான்கு சுவருக்குள் படம் பிடிக்க ஆரம்பித்தார்கள். இப்போது, டிஜிட்டல் கேமராவிலும் மொபைல்போனிலும் படம் பிடிக்குமளவுக்கு அறிவியல் வளர்ந்துவிட்டது.

'கேமரா அப்ஸ்குரா' என்ற கருவி 13ஆம் நூற்றாண்டில் வந்த பிறகே, பல்வேறு கேமரா கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. சர் ஜான் ஹெர்செல் என்பவர் 1839ஆம் ஆண்டு கண்ணாடியைப் பயன்படுத்தி நெகட்டிவ் எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், 'போட்டோகிராபி' (Photography) என்றும் பெயர் சூட்டினார். போட்டோகிராபி என்பது கிரேக்க மொழியில் 'ஒளியின் எழுத்து' என்று அர்த்தம்.

லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையில் புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். பிரபலமாக விளங்கிய இதற்கு, 'டாகுரியோடைப்' (Daguerreotype) என்று பெயர். இந்த முறைக்கு, 'பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயன்ஸ்' ஒப்புதல் அளித்தது. இதன் செயல்பாடுகள் 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி 'ஃப்ரீ டூ தி வேர்ல்ட்' என உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. இந்த நாளில் புகைப்படக் கலையின் பெருமையை உணர்ந்துகொள்ள ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி 'உலக புகைப்பட தினம்' கொண்டாடப்படுகிறது.

* ஜார்ஜ் ஈஸ்ட்மேன், 1888ல் முதல் முறையாக பேப்பர் ஃபிலிம்களைப் பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுப்பதைக் கண்டறிந்தார்.

* பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை 1900ல் 'கொடாக்' அறிமுகப்படுத்தினார்.

* ஆஸ்கர் பர்னாக், 1913ல், 35 மி.மி. ஸ்டில் கேமராக்களை வடிவமைத்தார்.

* சோனி நிறுவனம், 1981ல் முதல் டிஜிட்டல் கேமராவை தயாரித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us