PUBLISHED ON : பிப் 25, 2019

அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'தி வேர்ல்டு பெஸ்ட்' (The World's Best) எனும் ரியாலிட்டி நிகழ்ச்சியில், சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் (Lydian Nadhaswaram) எனும் 12 வயதுச் சிறுவன் சாதனை படைத்துள்ளான். ரஷ்ய இசைக் கலைஞர் கோர்சகோவ் (Nikolai Rimsky -Korsakov) உருவாக்கிய 'தி ஃபிளைட் ஆப் தி பம்பிள்பி' (The Flight of the Bumblebee) எனும் இசைக்கோவை நிகழ்ச்சியில் லிடியன், பியானோ வாசித்தான். நிமிடத்திற்கு 325 பீட்களை வாசித்து, நிகழ்ச்சி நடுவர்களை பிரமிக்க வைத்தான். இதன் மூலம் ரியாலிட்டி நிகழ்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு லிடியன் தேர்வாகியுள்ளான். லிடியனின் இசை வாசிப்பு வேகம் சராசரி மனிதர்களின் வாசிப்புத் திறனைப் போல் இருமடங்கு ஆகும். லிடியனை தமிழக இசைத் துறை பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
நிகழ்ச்சியின் வீடியோவைக் காண: https://tinyurl.com/pianoNews
