உள்ளடக்கத்திற்கு செல்ல
நிரந்தர விண்வெளி நிலையம் இலக்கில் சீனா முன்னேற்றம்
நிரந்தர விண்வெளி நிலையம் இலக்கில் சீனா முன்னேற்றம்
PUBLISHED ON : ஏப் 24, 2017
அ நிறம் | அளவு
வரும் 2022க்குள், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் (ISS - இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்) போட்டியாக, நிரந்தர விண்வெளி நிலையத்தை அமைக்க, சீனா மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இச்செயல்திட்டத்தின் முக்கிய நகர்வாக, முதல் ஆளில்லா சரக்கு விண்கலத்தை (டியான்ஜூ-1), சில தினங்களுக்கு முன், வெற்றிகரமாக சீன விஞ்ஞானிகள் விண்ணில் ஏவியுள்ளனர். டியான்ஜூ 1 (Tianzhou - 1) விண்கலம் விண்வெளியில் இயங்கி வரும் சீனாவின் டியான்காங் - 2 விண்வெளி நிலையத்துக்குத் தேவையான எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும்.
