PUBLISHED ON : ஜூலை 18, 2016

தும்பிகளைப் பிடித்து விளையாடுவது (Dragonfly) என்பது சிறுவர்களாகிய நமக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. நமக்கு இது விளையாட்டு என்றாலும், தும்பிகளுக்குத் துன்புறுத்தலாகவே இருக்கும். அதற்காக, நாமே நம் கைப்பட தும்பி பொம்மை செய்யக் கற்றுக்கொண்டால் அதை வைத்து மகிழ்ச்சியாக விளையாடலாம் அல்லவா!
தேவையான பொருட்கள்
1. OHP தாள் (கண்ணாடி போன்ற மெல்லிய பிளாஸ்டிக் தாள்)
2. மர கிளிப் - 1
3. மஞ்சள் மற்றும் சிவப்பு நிற அக்ரலிக் பெயின்ட்
4. கிளாஸ் லைனர்
5. மஞ்சள் நிற கிளாஸ் கலர் (இவை அனைத்தும் கிராப்ட் கடைகளில் கிடைக்கும்)
6. கூக்லி கண்கள்
7. பசை
கிளிப்பை OHP தாளில் செருகி கிளிப்பின் இருபுறமும் இருக்கும் தாளில் தும்பியின் இறக்கைகளை வரைந்து வெட்டிக் கொள்ளவும்.
கிளாஸ் லைனர் கொண்டு இறக்கைகளின் வெளிக்கோடுகளை வரைந்து நன்கு காய விடவும்.
மஞ்சள் நிற கிளாஸ் கலரால் இறக்கைகளின் உட்புறத்தில் வண்ணம் தீட்டி, நன்கு காய விடவும். இறக்கைப் பகுதி தயார்!
உடல் பகுதிக்கு, கிளிப் முழுவதும் சிவப்பு நிறம் தீட்டிக் காய விடவும்.
மஞ்சள் பெயின்டில் வட்டங்கள் வரைய வேண்டும். மேலிருந்து கீழாக வட்டத்தின் அளவைச் சிறிதாக்கி வரைய வேண்டும். உடல் பகுதியும் தயார்!
இறக்கைகளைப் பசை தடவி உடல் பகுதியுடன் ஒட்டி விட வேண்டும்.
கண்களைப் பொருத்தி, வாய் பகுதியை வரைந்து விட்டால் வண்ண மயமான தும்பிகள் தயார்.
- ஓவியா டீச்சர்

