sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

/

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி

மொக்கை மஞ்சு ஷார்ப் சாந்தி


PUBLISHED ON : ஜூலை 18, 2016

Google News

PUBLISHED ON : ஜூலை 18, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாந்தி: என்னாச்சு மஞ்சு... காலை சாய்ச்சு சாய்ச்சு கோணலா நடக்குற?

மஞ்சு: என்னைப் பார்த்தா ப்ரேக் டான்ஸுக்கு ஸ்டெப் போடுற மாதிரி தெரியுதா? குதிரைல இருந்து கீழ விழுந்துட்டேண்டி... அதான் இப்பிடி.

சா: ஓ... பீச்சுல போய் நீ போட்ட ஆட்டம் இதுதானா? குதிரை நல்லா இருக்கில்ல?

ம: ஆமா ஆமா. குதிரைக்கு ஒண்ணும் ஆகலை. அலெக்ஸாண்டர் மாதிரி ஏற நெனச்சு, எனக்கு அடிபட்டதுதான் மிச்சம்.

சா: அலெக்சாண்டர் மாதிரியா? வர வர உன்னோட சேட்டைக்கு அளவில்லாமப் போச்சு. ஜூலை 20 அவரோட பிறந்தநாள் வருதுன்னு இப்படிச் சொல்றியா? வரலாற்றுல அவரு மட்டுமில்ல, அந்தக் குதிரையும் புகழ்பெற்றதுதான்!

ம: அதுக்கு என்ன பண்றது? பீச்சுல இருக்குற குதிரையை வரலாற்றுல ஏத்தலாம்ன்னு நினைச்சேன். கனவு காணுறது தப்பில்லையே?

சா: நல்லாத்தான் பேசுற. ஆனால், தன்னோட 'புசிபேலஸ்' குதிரை இறந்தப்போ, ஒரு வாரம் சாப்பிடாம அலெக்ஸாண்டர் துக்கத்துல இருந்ததா வரலாறு இருக்கு, தெரியுமா?

ம: ஐயோ... இப்பிடி உண்ணாவிரதம் இருக்குற கான்செப்ட் எல்லாம் எனக்கு செட் ஆகாது.

சா: விரதம் இருந்தா ரொம்ப மருத்துவ பலனும் இருக்காம்! 'மாதம் ஒரு முறை விரதம் இருந்தா மாரடைப்பு ஏற்படுறதைத் தவிர்க்கலாம்'னு இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆய்வு பண்ணிச் சொல்லியிருக்காங்க.

ம: எல்லாம் சரிதான். சாப்பிடாம இருந்தா உடம்புல சத்து இல்லாமப் போய்டாதா?

சா: விரதம் இருந்தா உடலோட மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்; உடலியக்கமும் ரத்த ஓட்டமும் சீராகும், தெரிஞ்சுக்கோ.

ம: மெட்டபாலிசம் அதிகரிக்க ஏன் விரதம் இருக்கணும்? தண்ணி அதிகமாக் குடிச்சாலே போதும்னு நான் படிச்சுருக்கேனே...

சா: நீ இன்னைக்கு ஷார்ப்பா இருக்கே... என்ன வந்தாலும் சாப்பிடாம இருக்க முடியாதுன்னு சொல்றதுதானே ஒன்னோட ஐடியா?

ம: சரி சரி... என்னோட சாப்பாட்டு ரகசியத்தை சத்தமாப் பேசி தம்பட்டம் அடிச்சுத் தொலைக்காதே...






      Dinamalar
      Follow us