sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கணினி அறிவியல்: கிப்லி ஓவியத்தை உருவாக்கியவர்

/

கணினி அறிவியல்: கிப்லி ஓவியத்தை உருவாக்கியவர்

கணினி அறிவியல்: கிப்லி ஓவியத்தை உருவாக்கியவர்

கணினி அறிவியல்: கிப்லி ஓவியத்தை உருவாக்கியவர்


PUBLISHED ON : ஏப் 07, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமூக வலைத்தளங்களில் தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகளைக் கொண்டு கிப்லி ஆர்ட் படங்கள் உருவாக்குவதில் பயனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிப்லி படங்கள் என்பவை கையால் வரையப்பட்ட அழகிய அனிமேஷன் பாணியில் இருக்கும். 'கிப்லி ஆர்ட் (Ghibli)' என்ற சொல் அரபு மொழியிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. இதற்கு சஹாரா பாலைவனக் காற்று என்று பொருள். ஜப்பானில்தான் இந்த கிப்லி ஆர்ட் முதலில் பிரபலமானது. அங்கு இதை 'ஜிப்லி ஆர்ட்' என்று சொல்கிறார்கள்.

இன்று சமூக வலைத்தளம் முழுவதும் பரவிவரும் இந்த கிப்லி ஆர்ட்டினை முதலில் உருவாக்கியவர் ஒரு பிரபல ஜப்பானிய இயக்குநர் தான். இவர் சிறு வயதிலிருந்தே பறக்கும் விமானங்கள், ஆகாயம் ஆகியவற்றின் மீது காதல் கொண்டார். விமானம் ஓட்டுவதுபோலவும், ஆகாயத்தில் பறப்பது போன்றும் கற்பனை செய்து, அதை ஓவியமாக வரைந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அவர் ஜூன் 15, 1985ஆம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து 'Studio Ghibli' என்ற அனிமேஷன் நிறுவனத்தை ஜப்பானில் தொடங்கினார். அதில் கிப்லி ஆர்ட்டை உருவாக்கி, அதைத் திரைப்படமாக எடுத்தார்.

2003ஆம் ஆண்டு இவர் எடுத்த திரைப்படமான 'Spirited Away' சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதையும் வென்றது. இப்போது அவருக்கு 84 வயதாகிறது. சமீபத்தில் கூட 'The Boy and the Heron (2023)' என்ற கிப்லி ஆர்ட் ஸ்டைல் அனிமேஷன் திரைப்படத்தை எடுத்திருந்தார்.

CGI, VFX எனப் பல அனிமேஷன் தொழில்நுட்பங்கள் வந்து, தத்ரூபமாக எதையும் திரையில் உருவாக்கித் தந்தாலும், கிப்லி ஆர்ட் அனிமேஷனுக்கு என ஒரு தனி மதிப்பும், ரசிகர்கள் கூட்டமும் எப்போதும் இருக்கிறது. இந்தப் பாணியில் தான் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் தற்போது கிப்லி ஆர்ட் படங்களை உருவாக்கிப் பயனர்களைக் கவர்ந்துள்ளன.

உங்களுக்கான கேள்வி. இந்த கிப்லி ஆர்ட்டினை உருவாக்கிய அந்த பிரபல ஜப்பானிய இயக்குநர் யார்?

விடை: ஹயோ மியாசாக்கி (Hayao Miyazaki)






      Dinamalar
      Follow us