தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கூம்பு எலி! குறும்பு எலி!

கூம்பு எலி! குறும்பு எலி!

கூம்பு எலி! குறும்பு எலி!


PUBLISHED ON : மே 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

ஜியாமெட்ரிக் வடிவங்களை, விதவிதமான கிராஃப்ட் பொம்மைகளாக மாற்ற முடியும். கூர்மையான முகம் இருக்கும் விலங்கு பொம்மைகளை கூம்பு வடிவத்தைக் கொண்டு செய்யலாம். இந்த வாரம் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் நாம் பயன்படுத்தும் கூம்பை, ஓர் அழகிய எலியாக மாற்ற போகிறோம்.



தேவையான பொருட்கள்


பிறந்தநாள் கூம்பு - 1, A-4 அளவு வண்ண சார்ட் அட்டை -2, கத்தரிக்கோல், கூக்லி கண்கள், கருப்பு நிற தாள் (3 செ.மீ நீளம், 1 செ.மீ அகலம்) ரோஸ் நிற பாம்பாம் பந்துகள் - 2, நீல நிற பாம்பாம் பந்து - 1, பைப் கிளீனர் வயர் (Pipe cleaner wire) -1. இது பார்க்க கம்பளியால் செய்த வயர் மாதிரி இருக்கும். இந்தப் பொருட்கள் அனைத்தும் கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்.

* பிறந்தநாள் கூம்பை இறுகப் பற்றும் வகையில், சார்ட் அட்டையைச் சுற்ற வேண்டும். தேவைப்படும் இடங்களில் பசையைப் பயன்படுத்தி ஒட்டிவிடுங்கள். கூம்பின் அடிப்பகுதியில், சார்ட் அட்டையை இடைவெளிவிட்டு வெட்டி மடக்கிவிட வேண்டும்.

* சார்ட் அட்டையில் கூம்பை வைத்து, அடியை அளவெடுத்து, ஒரு வட்டத்தை வெட்ட வேண்டும். அதைப் பசை தடவிக் கூம்பியின் அடியில் ஒட்டிவிட்டால், எலியின் உடல் பகுதி வேலை முடிந்துவிடும்.

* கூம்பின் முனையில் கூக்ளி கண்கள், பாம்பாம் பந்துகளை ஒட்டிவிட்டால், முறையே கண், மூக்கு, காதுகளும் தயார் ஆகிவிடும்.

* கருப்பு நிறத் தாளில் மீசை செய்து ஒட்ட வேண்டும். கூம்பின் அடியில் பைப் கிளீனர் வயரை செறுகிவிடவேண்டும்.

பிறந்த நாள் கூம்பில் செய்த எலி, குறும்பாக உங்களைப் பார்க்குமே?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us