sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/உலகை அன்பால் வென்றெடு!

உலகை அன்பால் வென்றெடு!

உலகை அன்பால் வென்றெடு!


PUBLISHED ON : செப் 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“உலகத்தில் உண்மையான அமைதி நிலவ வேண்டும் என்றால், அதைக் குழந்தைகளிடம் இருந்துதான் தொடங்க வேண்டும்” என்றார் காந்தி.ஆனால், இன்றைய நிஜம் என்ன? சின்னஞ்சிறு வயதில் இருந்தே டாம் & ஜெர்ரி கார்ட்டூன் படத்தைப் பார்க்கும் சிறுவர்கள், பூனை எலியை நசுக்குவதைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறார்கள்.

அது மட்டுமல்ல; நாம் பார்க்கும் சினிமாவும் நமக்குப் பழிக்குப்பழி என்ற பாடத்தையே சொல்கின்றன. சிறுவர் உலகம், போட்டி, பொறாமை போன்ற உணர்வுகளாலேயே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. காந்தி சொல்லும் அமைதியை சிறுவர்களிடம் இருந்து தொடங்குவது எப்படி?

பொதுவாக இரண்டு நண்பர்களுக்குள் சண்டை வந்தால் என்ன நடக்கிறது?

நீ என்னைக் காயப்படுத்தி விட்டாய் அல்லவா? பதிலுக்கு நானும் உன்னைக் காயப்படுத்துவேன் என்பதுதான் பொதுவான நடைமுறை.

காந்தி என்ன சொல்கிறார் தெரியுமா?

'கண்ணை இழந்ததற்குப் பதில், மற்றவர்கள் கண்ணையும் காயப்படுத்துவதுதான் என்றால், மொத்த உலகமும் குருடாகி விடும்' என்கிறார். 'நண்பரே எதிரியாகும் சூழ்நிலையை எதிர்கொள்ள நேரும்பொழுது, அதை அன்பால்தான் வென்றெடுக்க வேண்டும்' என்கிறார்.

இது சாத்தியமா? யார் தொடங்குவது என்றால், அதற்கும் பதிலை காந்தி சொல்லிவிட்டார்.

'நீ உலகத்தில் என்ன மாற்றம் நிகழ வேண்டும் என நினைக்கிறாயோ, முதலில் நீ அதுவாக மாற வேண்டும்' என்கிறார்.

'உன்னைக் காயப்படுத்தியவர்கள் தவறை உணர்ந்து சமாதானத்தைத் தீர்வாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், நீ தான் முதலில் அதைத் தொடங்க வேண்டும்' என்கிறார்.

மனிதன் என்பவன் அவன் சிந்தனையின் வெளிப்பாடுதான். நீ என்னவாக ஆக விரும்புகிறாயோ அதுவாக ஆக முடியும்.

நான் ஏன் என் நண்பன் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிறாயா?

அதற்கும் காந்தியிடம் பதில் இருக்கிறது.

'பலவீனமானவனால் ஒரு பொழுதும் மன்னிக்க முடியாது. மன்னிப்பது என்பது பலவானின் குணம்.' இதைவிட ஒரு படி மேலே போய் காந்தி சொல்கிறார், 'கோழையால் அன்பை வெளிப்படுத்தவே முடியாது. தைரியமானவனால்தான் அன்பை வெளிப்படுத்த முடியும்.'

இதை எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், ஒரு நண்பன் என்னைக் காயப்படுத்தும் பொழுது வலிக்கத்தானே செய்யும்?

அப்பொழுது தைரியமும், மன்னிக்கும் குணமும் எப்படி வரும் என்று கேட்பது காதில் விழுகிறது. இதற்கும் காந்தியிடம் பதில் இருக்கிறது.

'என் அனுமதியின்றி என்னை யாரும் காயப்படுத்திவிட முடியாது.'

நான் அவனை உண்மையான நண்பனாக நினைத்தேன். அவ்வளவு ஆழமான நட்பில் அவனுடைய இந்தச் செய்கை என்னைக் காயப்படுத்தி விட்டது என்று முணுமுணுப்பது காதில் விழுகிறது. அவன் செய்த தவறை நீ வெறுக்கலாம். ஆனால், அதற்காக அவனை நீ வெறுக்கக் கூடாது என்பதையும் காந்தி சொல்லி இருக்கிறார்.

ஆழமான நட்பு என்றால், ஏன் உன் நண்பன் உன்னிடம் அப்படி நடந்துகொண்டான் என்று யோசித்துப்பார். அவனுக்கும், உனக்குமான ஆரோக்கியமான தருணங்களை யோசித்துப் பார். முதலில் அவன் செய்த செயலை ஏற்பது கடினமாக இருக்கலாம்.

ஆனால், காந்தி சொல்வது போல், 'என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தால், என்னால் அதற்கான திறனை வளர்த்துக்கொள்ள முடியும். ஆரம்பத்தில் அந்தத் திறன் இல்லாவிட்டால் கூட நம்பிக்கையால் வளர்த்துக்கொள்ள முடியும்.'

இப்படி, நமக்குப் பிறருடன் வரும் சச்சரவை களையாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? காந்தி சொன்னது போல், 'உனக்கு முக்கியமானவர்கள் யார் என்பது, அவர்களை இழக்கும் வரை உனக்குத் தெரியாமல் போகலாம்.'

சில உறவுகளோடு வரக்கூடிய கசப்பான அனுபவங்களால் சிலருக்கு வாழ்க்கை பற்றிய நம்பிக்கை போகலாம். திரும்ப யாருடனும் நெருங்கிப் பழகுவது பற்றிய பயம் இருக்கலாம். இங்கும் நம் மனத்தில் காந்திதான் நம்பிக்கை விதைக்கிறார்.

'மானுடத்தின்பால் நம்பிக்கை இழக்கக்கூடாது. மனிதம் என்பது கடல் போன்றது. அதில் ஒரு சில துளிகள் அழுக்காக இருப்பதால், கடலே அழுக்காகி விடாது.'

- மா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us