தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கை கொடுக்கும் காந்தி!

கை கொடுக்கும் காந்தி!

கை கொடுக்கும் காந்தி!


PUBLISHED ON : செப் 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

உலகம் கண்ட அசலான சிந்தனையாளர்களில் ஒருவர், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள். இந்தியர்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டவர். வாழ்க்கை நிலையை உணர்ந்துகொண்டவர்.

மனிதாபிமானத்தையே முதற்குணமாகக் கொண்டவர். அதேசமயம், மாறிவரும் உலகின் முன்னேற்றங்களையும் தெரிந்தவர். அத்தகைய ஒரு மனிதர் வழங்கிய தீர்வுகள், இன்றும் ஆச்சரியப்படுத்துகின்றன.

'லீடர்' என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் தந்தவர். அதாவது, மக்களை வழிநடத்துபவர். 'இவர் இப்படி நினைப்பாரோ, அவர் அப்படி எண்ணிக்கொள்வாரோ' என்றெல்லாம் தன் கருத்துகளை, சந்தர்ப்பத்துக்கேற்ப திருத்திக்கொண்டவர் அல்ல காந்தி. தேசநலன், மக்கள் நலன் ஆகியவற்றை மட்டுமே மனத்தில் நிறுத்தி, துணிச்சலாகப் பேசியவர். எல்லா பிரச்னைகளுக்கும் சாத்வீகமான (அமைதியான) முறையில் தீர்வு காண முடியும் என்பது அவரது துணிபு.

அவரது கருத்துகள் காலாவதி ஆகிவிட்டன என்ற பேச்சு பரவலாகக் கேட்கிறது. அவரது தீர்வுகளை விமர்சிப்பவர்களும் உள்ளனர். எப்படித் திருவள்ளுவருடைய கருத்துகள் எல்லா காலத்துக்கும் பொருந்துகின்றனவோ, அதேபோல், காந்தியடிகள் முன்வைத்த அணுகுமுறைகள், சாகாவரம் பெற்றவை. அவை 'ரெடிமேட்' சட்டைகள் அல்ல; எடுத்து அணிந்துகொள்வதற்கு. மாறாக, அவை திசை காட்டிகள். கலங்கரை விளக்கங்கள்.

இன்றைக்கு நாம் சந்திக்கும் எண்ணற்ற பிரச்னைகளை இந்த இதழ் முழுவதும் 'கவன'ப்படுத்தியுள்ளோம். அவற்றுக்கு காந்தியத் தீர்வு என்ன, அணுகுமுறைகள் என்ன, என்பதை வரிசைப்படுத்தியுள்ளோம்.

இதோ, கை கொடுக்கக் காத்திருக்கிறார் காந்தி. வாருங்கள், வழிநடப்போம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us