மெய் வளர்ப்போம்: குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடிங்க
மெய் வளர்ப்போம்: குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடிங்க
PUBLISHED ON : பிப் 10, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இது ஒரு வைட்டமின். நம் உடலில் ஆரோக்கியமான புதிய செல்கள் உருவாக உதவும்.
இதற்கு ஃபோலிக் அமிலம் (Folic acid), ஃபோலேட் (folate) என்ற பெயர்களும் உள்ளன.
கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் அவசியம்.
மன அழுத்தம், பக்கவாதம், ஞாபக மறதி, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படாமல் காக்கும்.
பச்சைக் காய்கறி, பழங்கள், பட்டாணி, விதைகள், பீன்ஸ், காளான்கள் ஆகிய உணவுகளில் நிறைந்துள்ளது.
இதைத் தனியாக மருந்து வடிவில் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவர் அறிவுறுத்தல் இல்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.
பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுத்துக் கொண்டால் வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்டவை ஏற்படும்.
விடைகள்: வைட்டமின் பி9