
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
01. இந்தியாவில் உள்ள எத்தனை ஆன்மிகத் தலங்களில், 'ரோப் கார்' திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது?
அ. 20
ஆ. 25
இ. 18
ஈ. 30
02. கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையில், ரூ.4,400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா சோலார் பவர் பேனல் தயாரிப்பு நிறுவனத்தை, தமிழக முதல்வர் சமீபத்தில் திறந்து வைத்தார். இது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
அ. மதுரை
ஆ. திருநெல்வேலி
இ. கோவை
ஈ. திருச்சி
03. தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப, 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களுக்கு, எந்தத் தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி வழங்க, மாநிலத் தகவல் தொழில்நுட்பவியல் துறை திட்டமிட்டு உள்ளது?
அ. ரோபோடிக்ஸ்
ஆ. மெஷின்
இ. '3-டி' பிரின்டிங்
ஈ. ஏஐ
04. அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்தும் முயற்சியில் அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டும் நிலையில், அங்கிருந்து பிற நாட்டவர்கள் வந்தாலும் ஏற்போம் என, எந்த நாட்டின் அதிபர் அறிவித்துள்ளார்?
அ. கெளதமாலா
ஆ. ரஷ்யா
இ. பனாமா
ஈ. மெக்சிகோ
05. இந்தியாவின் எந்த மாநிலத்தில், யு.சி.சி. எனப்படும் பொது சிவில் சட்டம் அமலாகி சில நாட்களே ஆன நிலையில், 'லிவ் இன்' உறவுமுறை தொடர்பான முதல் பதிவு சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
அ. ஜார்க்கண்ட்
ஆ. உத்தரகண்ட்
இ. சத்தீஸ்கர்
ஈ. பீஹார்
06. காலனித்துவ மரபுக்கு முடிவுக் கட்டும் வகையில், இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள, கிழக்கு பிராந்திய ராணுவ தலைமையகத்தின், 'வில்லியம் கோட்டை' என்ற பெயர், 'விஜய் துர்க்' என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது?
அ. சென்னை, தமிழ்நாடு
ஆ. பெங்களூரு, கர்நாடகம்
இ. கோல்கட்டா, மேற்குவங்கம்
ஈ. மும்பை, மகாராஷ்டிரம்
07. லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த, இசைத்துறையின் உயரிய, 'கிராமி' விருது வழங்கும் விழாவில், 'சிறந்த தற்கால ஆல்பம்' பிரிவில், கிராமி விருதை வென்றுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகி யார்?
அ. லட்சுமி
ஆ. தருணிகா
இ. சாருணிகா
ஈ. சந்திரிகா
08. உத்தரகாண்டில் நடக்கும், 38ஆவது தேசிய ஸ்குவாஷ் விளையாட்டு போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், தமிழக வீரர் வேலவன் வென்ற பதக்கம்?
அ. தங்கம்
ஆ. வெள்ளி
இ. வெண்கலம்
ஈ. பிளாட்டினம்
விடைகள்: 1. இ, 2. ஆ, 3. ஈ, 4. அ, 5. ஆ, 6. இ, 7. ஈ, 8. அ.