sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

பிரபஞ்ச விஞ்ஞானி!

/

பிரபஞ்ச விஞ்ஞானி!

பிரபஞ்ச விஞ்ஞானி!

பிரபஞ்ச விஞ்ஞானி!


PUBLISHED ON : ஜன 08, 2018

Google News

PUBLISHED ON : ஜன 08, 2018


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்

பிறந்த நாள் : ஜனவரி 8, 1942

ஆக்ஸ்ஃபோர்டு, இங்கிலாந்து

அப்போது அவருக்கு வயது 21. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டு இருந்தார். அந்தக் காலகட்டத்தில் உடல் தளர்ந்து அடிக்கடி கீழே விழுவார். என்ன நோயென்று அறியாமல் மருத்துவர்களாலும் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. “கை, கால்களை இனி அசைக்க முடியாது, தானாக எதையும் செய்ய முடியாது, வாய் திறந்து பேச முடியாது, வாழும் வரை சக்கர நாற்காலி பயணம், அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ மாட்டார்' என்பதை மட்டும் தெளிவாகச் சொன்னார்கள். இதற்குக் காரணம் இவரைத் தாக்கிய நரம்புச் செயலிழப்பு நோய் (ALS). இத்தனை துன்பங்களுக்கு இடையிலும் மனம் தளராமல், 75வது வயதிலும் தம் பகுத்தறிவுக் கருத்துகளை வெளிப்படுத்தி வாழும் விஞ்ஞானிகளில் மிகவும் புகழ் பெற்றவராக விளங்குகிறார் ஸ்டீபன் ஹாக்கிங். ஐன்ஸ்டீனுக்குப் பிறகு பிறந்த உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர் இவர்!

பள்ளியில் படிக்கும்போது, கணக்குப் பாடம் நடத்திய ஆசிரியரை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டதால், கணக்குப் பாடத்தில் ஆர்வம் கொண்டார். இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த பழைய பொருட்கள், கடிகார பாகங்கள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கும் அளவுக்கு இவரது ஆர்வம் இருந்தது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அறிவியல், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வானவியல், பிரபஞ்சவியல் இவற்றுடன் நரம்பு நோயைச் சுமந்துகொண்டே தனது (பிஎச்.டி.) டாக்டர் பட்டத்தையும் பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியில் இணைந்து, அறிவியல் துறையில் பங்களிப்புச் செய்தார். அந்தப் பல்கலைக்கழகத்தின் 'லூகாஸியன் நாற்காலி' என்ற அதி கௌரவம் மிக்க பதவியையும் அலங்கரித்தார். அண்டவியல் (Cosmology), கதிரியக்க ஈர்ப்பு விசைத் துறையில் (Quantum gravity) சிறந்து விளங்கினார். இவர் எழுதிய, A BRIEF HISTORY OF TIME எனும் நூல் அறிவியல் உலகில் போற்றத்தகுந்தது. இதன் மூலம் அண்டப் பெருவெடிப்பு, கருந்துளைக் கோட்பாடுகளின் மூலம் பிரபஞ்சத்தின் புதிர்களுக்கு விடை சொன்னார். மிக மெலிதான வகையில் விரல்களை அசைக்கக்கூடிய ஹாக்கிங், தம் எண்ணங்களைக் கணினி ஒன்றில் தட்டச்சு செய்தால், சொற்களை உச்சரிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன் மூலமாகவே கருத்துகளை பகிர்ந்தும் புத்தகங்களை எழுதியும் வருகிறார்.

உடலில் நடந்த மாற்றங்களால் சோர்ந்து விடாமல், உலகில் நடக்கும் அறிவியல் மாற்றங்களை விவரிக்கும் விஞ்ஞானி ஹாக்கிங் நம்மிடையே வாழும் வியப்பின் உச்சமாக இருக்கிறார்.






      Dinamalar
      Follow us