PUBLISHED ON : மார் 06, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு கிராமத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமாக, 963 ஓட்டுகள் பதிவாகின. வெற்றிபெற்ற வேட்பாளருக்கும் மற்ற வேட்பாளருக்குமான ஓட்டுகள் வித்தியாசம் முறையே 53, 79, 105 ஆகும். எனில், ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற ஓட்டுகள் எத்தனை?
கணக்கும் இனிக்கும் விடை
வெற்றிபெற்ற வேட்பாளரின் ஓட்டுகள் = (மொத்த ஓட்டுகள் + மற்ற வேட்பாளர்களின் ஓட்டு வித்தியாசம்) / 4
= (963+53+79+105) / 4
= 1200 / 4
= 300.
எனவே, வெற்றிபெற்ற வேட்பாளரின் ஓட்டுகளான 300ஐ வைத்து, மற்ற வேட்பாளர்களின் ஓட்டு எண்ணிக்கையை அறியலாம்.
அதாவது, இரண்டாவது வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் = 300--53 = 247.
மூன்றாவது வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் = 300--79 = 221.
நான்காவது வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் = 300--105 = 195.

