
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்
.
1. 'இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், எந்தத் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து, பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்' என, பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது?
அ. வேளாண்
ஆ. மருத்துவம்
இ. டெக்ஸ்டைல்
ஈ. அறிவியல்
2. தமிழகத்தில் உள்ள வேலூர் மற்றும் இராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த இரு உணவுப் பொருட்களுக்கு, புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அவை என்னென்ன?
அ. மல்கோவா மாம்பழம்,
சீமை இலந்தைப்பழம்
ஆ. முள்ளு கத்திரிக்காய், குண்டு மிளகாய்
இ. கொடி முந்திரி, திராட்சைப் பழம்
ஈ. சீமைச் சுரக்காய், சின்ன வெங்காயம்
3. அமெரிக்காவைச் சேர்ந்த, 'பிளாக் ஸ்டோன்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன், 2022ஆம் ஆண்டு, எவ்வளவு தொகையை ஊதியமாகப் பெற்று சாதனை படைத்துள்ளார்?
அ. ரூ. 20,000 கோடி
ஆ. ரூ. 15,000 கோடி
இ. ரூ. 5,000 கோடி
ஈ. ரூ. 10,000 கோடி
4. இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த ஔரங்காபாத் (சத்ரபதி சாம்பாஜி நகர்), உஸ்மனாபாத் (தாராஷிவ்) ஆகிய இரு நகரங்களின் பெயர் மாற்றத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
அ. மஹாராஷ்டிரம்
ஆ. மேற்கு வங்கம்
இ. உத்தரப் பிரதேசம்
ஈ. பீஹார்
5. ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை வைரங்கள் தயாரிப்பு தொடர்பான ஆய்வு மையத்தை, எங்கு தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது?
அ. பூனே, யு.ஆர்.டி.ஐ.பி.
ஆ. கோல்கட்டா, சி.ஜி.சி.ஆர்.ஐ.
இ. சென்னை ஐ.ஐ.டி.
ஈ. மும்பை, டி.ஐ.எப்.ஆர்.
நான்கில் ஒன்று சொல்
1. இ, 2. ஆ, 3. ஈ, 4. அ, 5. இ.

